வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2023
வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2023

HomeFact Checkசமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகளா இவை?

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகளா இவை?

சமீபத்தில் காலமான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்பதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சமீபத்தில்
Source: Facebook

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் கடந்த 6 ஆம் தேதியன்று காலமானார். சமீபத்தில் மறைந்த லதா மங்கேஷ்கருக்கு வயது 92. முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், “ஒவ்வொருவரும் அறியவேண்டிய வாழ்க்கை பாடம்
லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள். மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த காலணிகள், விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.

என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே. என் வீடு அரண்மனை போன்று, கோட்டை போன்று உள்ளது. ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபுக்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன். அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை.

உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு.

தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ஆனால், சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு தாங்க வாழ்க்கை…யாருக்கும் உதவாத…வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்….
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்.”
என்று அவர் இறுதியாக பேசியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சமீபத்தில்
Source: Facebook

Facebook Link

சமீபத்தில்
Source: Facebook

Facebook Link

சமீபத்தில்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?

Fact Check/Verification

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என்பதாக பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கர், தனது கடைசி நாட்களில் மிக அமைதியாக இருந்ததாக எக்னாமிக் டைம்ஸ் இதழில் அவரை கவனித்துக் கொண்ட செவிலி தெரிவித்துள்ளார். மேலும், நுரையீரல் பாதிப்பினால் லதா மங்கேஷ்கர் வெண்டிலேட்டரில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: ET

தொடர்ந்து, அவரது இறுதி வார்த்தைகள் என்று பரவுகின்ற வாசகங்களை கீவேர்ட் சர்ச் மூலமாக தேடியபோது, கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பிட்ட பதிவு கேன்சரால் இறந்து போன பிரபல பேஷன் ப்ளாகர் Kyrzayda Rodriguez-ன் வார்த்தைகள் என்பதாக பரவி வருவது நமக்குத் தெரிய வந்தது. அவை சமீபத்தில் பகிரப்பட்ட பதிவுகள் அல்ல.

அப்போதே, குறிப்பிட்ட பதிவுடன் தவறுதலாக மற்றொரு கேன்சரால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணான Nicole Schweppe என்பவரது புகைப்படத்துடன் வைரலாக்கி வந்துள்ளனர்.

Kyrzayda கடந்த 2018 ஆம் ஆண்டே கேன்சரால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Facebook

Kyrzayda Rodriguez கடைசி நாட்களின் போது வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் இந்த வாசகங்களை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் வார்த்தைகள் என்பதாக வைரலாகும் பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

Conclusion

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என்பதாக பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

ET

TamoNews

Something Pretty

Kyrzayda Rodriguez: Facebook/Instagram

Refinery29

Ambrygen

The Laureate

People

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular