ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா உரிமையாளர் கூறியதாகப் பரவும் வதந்தி!

இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா உரிமையாளர் கூறியதாகப் பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் – ஹிமாலயா உரிமையாளர்

Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா நிறுவன உரிமையாளர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“இவர்தான் இமாலயா கம்பெனி சொந்தக்காரர். இந்து நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று சொல்கிறார். இந்துக்களுக்கு புரிந்தால் நல்லது.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

இந்துக்களின்
Screenshot from Facebook/balamurugan.t.900

Facebook Link

Screenshot from Facebook/rajendran.perumal.t

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா நிறுவன உரிமையாளர் கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலில் ஹிமாலயா நிறுவனர் குறித்து நாம் ஆராய்ந்தபோது முகமது மனல் கடந்த 1986ஆம் ஆண்டே இறந்துவிட்டார் என்பதும், மீரஜ் மனல் தற்போதைய சேர்மனாக இருக்கிறார் என்பதும் நமக்கு உறுதியானது.

மேலும், ஹிமாலயா நிறுவன உயர் பொறுப்பில் உள்ள தற்போதைய மனல் குடும்ப உறுப்பினர்களுடனும் இந்த வீடியோவில் இருக்கும் நபரின் உருவம் ஒத்துப்போகவில்லை.

எனவே, வைரல் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், வைரல் வீடியோவில் பேசுபவர் டெல்லியைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பானு பிரதாப் சிங் என்று அறிய முடிந்தது.

Times Express கடந்த ஜனவரி 25, 2020ல் சிஏஏவிற்கு எதிரான போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில்,  4 நிமிடம் 36 நொடிகளில் குறிப்பிட்ட வைரல் வீடியோ பகுதி இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் அவரது பெயர் பானு பிரதாப் சிங் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்று இதற்கு முன்னரும் பல்வேறு வீடியோக்கள் ஹிமாலயா உரிமையாளர் பெயரில் பரவிய நிலையில் அதற்கு ஹிமாலயா தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வைரல் வீடியோவில் இருப்பவர் ஹிமாலய நிறுவன உரிமையாளர் இல்லை என்பதும், அவர் பிரபல வழக்கறிஞர் பானு பிரதாப் சிங் என்பதும் உறுதியாகிறது.

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

இந்துக்களின் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஹிமாலயா நிறுவன உரிமையாளர் கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Times Express, Dated January 25, 2020


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular