Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
12 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகின்றது. அதிலும் தமிழக தலைநகரான சென்னையில் கொரானா பரவல் அதிக அளவில் உள்ளது. இப்பரவலானது நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக கூறி பாலிமர் நியூஸின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/eMJt1
Archive Link: https://archive.ph/453jq
Archive Link: https://archive.ph/8d2lv
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
12 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பாலிமர் நியூஸின் புகைப்படச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய முற்பட்டோம்.
முன்னதாக வைரலாகும் புகைப்படச் செய்தி பாலிமர் நியூஸில் வெளிவந்துள்ளதா என்பதை உறுதி செய்ய, பாலிமர் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு செய்தி பாலிமர் நியூஸில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாலிமர் நியூஸின் செய்தித் துறையினரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்கள்,
“இது தற்போதைய செய்தி அல்ல, சென்ற வருடம் வந்த பழைய செய்தி”
என்று விளக்கமளித்தனர்.
இது தவிர, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கமான ‘Greater Chennai Corporation’ பக்கத்தில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலானது முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளதையும் நம்மால் காண முடிந்தது.
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு நிரூபணமாகின்றது.
12 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பாலிமர் நியூஸின் புகைப்படச் செய்தி, சென்ற வருடம் வந்த பழைய புகைப்படச் செய்தியாகும். இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Greater Chennai Corporation: https://twitter.com/chennaicorp/status/1382726911370043397
Polimer News:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 31, 2025
Ramkumar Kaliamurthy
December 14, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2024