Fact Check
கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று அல்ல, அது ஒரு பாக்டீரியா நோய்த்தொற்று என்று சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதா?

Claim
கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று அல்ல, அது ஒரு பாக்டீரியா நோய்த்தொற்று என்று சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளது.
Fact
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகமும், உலக சுகாதார மையமும் இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
“COVID-19 உடலை பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) செய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, COVID-19 ஒரு வைரஸாக இல்லை, மாறாக கதிர்வீச்சுக்கு ஆளாகி இரத்தத்தில் உறைந்து மனித மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியாவாக இருப்பது கண்டறியப்பட்டது.
COVID-19 நோய் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்துகிறது, இது மனிதர்களில் இரத்தக் கட்டிகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் நரம்புகளில் இரத்தம் உறைந்து, ஒரு நபர் சுவாசிக்க கடினமாகிறது; ஏனெனில் மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனைப் பெற முடியாது, இதனால் மக்கள் விரைவாக இறக்கின்றனர்.
சுவாச சக்தி பற்றாக்குறைக்கான காரணத்தைக் கண்டறிய, சிங்கப்பூரில் உள்ள மருத்துவர்கள் WHO நெறிமுறையைக் கேட்கவில்லை, COVID-19 இல் பிரேத பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் கைகள், கால்கள் மற்றும் உடலின் பிற பாகங்களைத் திறந்து கவனமாக பரிசோதித்த பிறகு, இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்தக் கட்டிகளால் நிரப்பப்பட்டிருப்பதைக் கவனித்தனர், இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜனின் ஓட்டத்தையும் குறைத்து நோயாளியின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. இந்த ஆராய்ச்சியைப் பற்றி அறிந்ததும், சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் உடனடியாக கோவிட்-19 சிகிச்சை நெறிமுறையை மாற்றி, அதன் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் வழங்கியது. நான் 100 மி.கி மற்றும் இம்ரோமேக் எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். இதன் விளைவாக, நோயாளிகள் குணமடையத் தொடங்கினர், அவர்களின் உடல்நலம் மேம்படத் தொடங்கியது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் ஒரே நாளில் 14,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை வெளியேற்றி வீட்டிற்கு அனுப்பியது.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஒரு காலத்திற்குப் பிறகு, சிங்கப்பூரில் உள்ள மருத்துவர்கள், இந்த நோய் ஒரு உலகளாவிய புரளி என்று கூறி சிகிச்சை முறையை விளக்கினர், “இது இரத்த நாளங்களுக்குள் உறைதல் (இரத்த உறைவு) மற்றும் சிகிச்சை முறை தவிர வேறில்லை. ஆண்டிபயாடிக் மாத்திரைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும்
ஆன்டிகோகுலண்டுகளை (ஆஸ்பிரின்) எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதை இது குறிக்கிறது.
சிங்கப்பூரின் பிற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வென்டிலேட்டர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) ஒருபோதும் தேவையில்லை. இந்த நோக்கத்திற்கான நெறிமுறைகள் ஏற்கனவே சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளன.
சீனா ஏற்கனவே இதை அறிந்திருக்கிறது, ஆனால் அதன் அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை.
இந்தத் தகவலை உங்கள் குடும்பத்தினர், அண்டை வீட்டார், அறிமுகமானவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் அவர்கள் கோவிட்-19 பற்றிய பயத்தை அகற்றி, இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் கதிர்வீச்சுக்கு மட்டுமே ஆளான பாக்டீரியா என்பதை உணர முடியும். மிகக் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். இந்த கதிர்வீச்சு வீக்கம் மற்றும் ஹைபோக்ஸியாவையும் ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பிரின்-100 மி.கி மற்றும் அப்ரோனிக் அல்லது பாராசிட்டமால் 650 மி.கி. எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூலம்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்”
என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறினாரா?
Fact Check/Verification
கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று அல்ல, அது ஒரு பாக்டீரியா நோய்த்தொற்று என்று சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தொடர்ந்து தேடுகையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் தகவல் பொய்யானது என்று மறுத்து ஜூன் 7, 2021 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில் கூறப்பட்டிருந்தாவது,
சிங்கப்பூர் கோவிட்-19 நோயாளிக்கு பிரேத பரிசோதனையை மேற்கொண்டதாகவும், கொடுக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளை மீறி இந்த பரிசோதனையை செய்ததாகவும் தகவல் ஒன்று பரவி வருவது எங்களுக்கு தெரிய வந்தது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை யாவும் உண்மையல்ல.
உண்மைகள் – சிங்கப்பூர் அத்தகைய பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. இந்த தகவலில் கோவிட் 19 நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகள் என்று கூறப்படுபவை தவறானதாகும். தற்போது வரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே ரஷ்யா கூறியதாக இதே தகவல் பரப்பப்பட்டது. அத்தகவலும் பொய்யானது என்று அம்பலமானது.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இதனையடுத்து தேடுகையில் உலக சுகாதார மையம் அதன் ஆதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொரானா நோய்த்தொற்று பாக்டீரியாவால் வருவதில்லை; வைரஸாலேயே வருகின்றது என்று தெளிவுப்படுத்தியிருப்பதை காண முடிந்தது.
கோவிட் 19 நோயை உருவாக்கும் வைரஸ் கொரானாவிரிடே (Coronaviridae) எனும் குடும்பத்தை சார்ந்தது. இந்த வைரஸுக்கு எதிராக ஆண்டிபயோடிக்ஸ் வேலை செய்யாது.
கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலசமயம் பாக்டீரியா தொற்றாலும் சேர்த்து பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆன்டிபயோடிக்ஸ் மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார மையம் விளக்கி இருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் அல்லது மருத்துவமனைகள் கொரானா தொற்று SARS-CoV-2 எனும் வைரஸால் ஏற்படுவதாக கூறி இருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
ஆனால் பாக்டீரியாவால் இந்த நோய் பரவுவதாக எந்த ஒரு அறிக்கையோ, ஆதாரமோ நமக்கு கிடைக்கவில்லை.
மேலும் உலக சுகாதார மையம் கொரானா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு எவ்வாறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற நெறிமுறைகள் குறித்த அறிக்கை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதில் வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் எந்த ஒரு விளைவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
Also Read: பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று அல்ல, அது ஒரு பாக்டீரியா நோய்த்தொற்று என்று சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post By Ministry of Health, Singapore, Dated June 7, 2021
WHO Website