திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி ஒரு நொடியில் கலைக்கப்படும்” என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact Check/ Verification
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று, ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் பரபரப்பாக களப்பணி ஆற்றி வருகின்றார்.
கிராம சபை கூட்டம் என்ற பெயரில் “அதிமுகவை நிராகரிப்போம்” எனும் பதாகைகளுடம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.
நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகின்றார். ஆனாலும் இவர் என்ன செய்தாலும் சமூக ஊடகங்களில் சிலர் இவரை தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர்.
இவர்கள் கேலி செய்வதற்கு ஏற்றார்போல் மு.க.ஸ்டாலின் அவர்களும் அவ்வப்போது தப்பு தவறுமாக பேசி மாட்டிக் கொள்கின்றார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி ஒரு நொடியில் கலைக்கப்படும்” என்று கூறியதாகக் கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தனமைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி ஒரு நொடியில் கலைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படும் புகைப்படச் செய்தியின் உண்மைத்தனமைக் குறித்து ஆய்வு செய்யும்போது ஒருவேளை இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
இச்சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ள, அப்புகைப்படச் செய்தியை கவனமாக உற்று நோக்கினோம். இவ்வாறு செய்ததில் அப்புகைப்படத்தில் ஏற்கனவே இருந்த வாசகங்களை அழித்த தடையத்தை நம்மால் காண முடிந்தது. மேலும் கீழ்பகுதியில் தேதியும், ஊடகத்தின் பெயரும் மாற்றப்பட்டிருந்தை காண முடிந்தது.

இதன்படி பார்க்கும்போது இந்த புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் என்பது நமக்கு உறுதியாகியது.
இது எந்த ஊடகத்தின் புகைப்படச் செய்தியிலிருந்து எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய அந்த புகைப்படச் செய்தியை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் புகைப்படச் செய்தியானது பாலிமர் தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தியிலிருந்து எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Conclusion
“திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி ஒரு நொடியில் கலைக்கப்படும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/backi.king/posts/3992176724148220
Facebook Profile: https://www.facebook.com/srinivasa.sarma.10/posts/1225985897797314
Polimer News: https://twitter.com/polimernews/status/1349262867917197319
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)