Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்தியாவில் சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது.
இதில் தமிழகத்திற்கு அடுத்தப்படியாக அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தது மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்றது. பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய மதசார்பற்ற மஜ்லிஸ் கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளன. மேலும் இரு தொகுதிகளுக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றதால், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்றப்பின் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
Archive Link: https://archive.ph/MA9js
Archive Link: https://archive.ph/V8EAI
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மம்தா பானர்ஜி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, இத்தகவல் பரவ காரணமான புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
அதில் மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டதாக பரவும் தகவல் உண்மைதான் என்பதும், ஆனால் இந்த உத்தரவானது சமீபத்தில் இடப்பட்டதல்ல, அது 2018 ஆம் ஆண்டு இடப்பட்ட உத்தரவு என்பதும் நமக்கு தெரிய வந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அரசின் முறையான அனுமதி இல்லாமல், மத அடிப்படையிலான கல்வி நடத்தப்படுவதாக கூறி ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்பட்ட 125 பள்ளிகளை மூட மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இந்நிகழ்வானது அச்சமயத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வு குறித்து செய்தி மேலும் பல ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இந்நிகழ்வு குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நியூஸ்கார்டை எடிட் செய்தே, 2018 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை தற்போது நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Conclusion
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்பதையும், இந்த உத்தராவானது மூன்று வருடங்களுக்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு இடப்பட்டது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
News 18 Tamilnadu: https://www.facebook.com/News18TamilNadu/posts/1480117172096742
Hindustan Times: https://www.hindustantimes.com/india-news/bengal-govt-launches-crackdown-on-rss-inspired-schools/story-X8lAuTjkbMxs654fbQmtML.html
Nagpur Today: https://www.nagpurtoday.in/mamata-banerjee-to-shut-down-125-rss-affiliated-schools-for-not-following-syllabus/02221718
Republic World: https://www.youtube.com/watch?v=D0lBOyg8HQY
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.