மன்மோகன் சிங் அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து கெளரவிக்கப்பட்டார் என்று செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact check/Verification:
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பொருளாதார நிபுணராக மக்களிடையே அறியப்பட்டவர்.
காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் 13வது பிரதமராக நியமனமாவதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் பதவியேற்ற ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார் என்று ஷேர் சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகிறது.

அப்புகைப்படத்தில், “அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து கெளரவித்தார். மோடி புறக்கணிப்பு…புத்திசாலிக்கு தெரியும்…யாரை நண்பனாக வைத்திருப்பதென்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
மன்மோகன் சிங், ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அப்போது, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜோ பிடன் இந்தியா வந்தபோது, அவர் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை டெல்லியில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன. அதற்கான லிங்கை இங்கு இணைத்துள்ளோம்.

மேலும், ஜோ பிடனின் பதவியேற்பு விழாவின் போது மன்மோகன் சிங் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதனை உறுதிப்படுத்த ஜோ பிடனின் பதவியேற்பு விழா வீடியோ ஒன்றையும் இங்கே இணைத்துள்ளோம்.
Conclusion:
எனவே, மன்மோகன் சிங் அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் என்று பரவும் புகைப்படம் தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
எனவே, நியூஸ்செக்கர் தமிழ் வாசகர்கள் யாரும் இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
India times: https://www.indiatimes.com/news/india/joe-bidens-india-visit-pics-90729.html?picid=716162
The Guardian: https://youtu.be/cjIDO5G3lVM
US Embassy New Delhi (Flickr): https://www.flickr.com/photos/usembassynewdelhi/9356622284/
The Diplomat: https://thediplomat.com/2020/09/joe-biden-is-better-for-india-if-democratic-values-are-what-matters-most-in-us-india-ties/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)