Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: 2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு
Fact: பல வருடங்களாகவே இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கிறது.
2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு .” என்று இந்த செய்தி பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் தகவலில் உள்ளபடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு என்கிற நடைமுறை 2025ஆம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட உள்ளதா என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆராய்ந்தபோது அதற்கு முந்தைய வருடங்களிலுமே வருடாந்திர விடுமுறை அறிவிப்புகளில் அனைத்து சனி மற்றும் ஞாயிறுகளில் விடுமுறை என்பது இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் அலுவலக இணை இயக்குநர் கே.மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்கிற அறிவிப்பு பல வருடங்களாகவே தமிழக அரசின் வருடாந்திர விடுமுறை அரசாணைகளில் இடம்பெற்றுள்ளது . இந்த அறிவிப்பு புதிதான ஒன்று அல்ல” என்று உறுதி செய்தார்.
மேலும், 2025 முதல் அனைத்து சனி, ஞாயிறுகளிலும் வங்கிகளுக்கும் விடுமுறை என்று செய்தி பரவிய நிலையில் அதற்கும் மறுப்பு தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி உண்மையா?
Conclusion
2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று பரவும் செய்தி திரிக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Tamil Nadu Government GO’s
Phone Conversation with, K.Maran, Joint Director, (Chief Minister’s Office)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.