ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழ்நாடு அரசு அதிகாரி சண்முகராஜன் பெண்ணை எட்டி உதைப்பதாகப் பரவும் தெலுங்கானா வீடியோ!

தமிழ்நாடு அரசு அதிகாரி சண்முகராஜன் பெண்ணை எட்டி உதைப்பதாகப் பரவும் தெலுங்கானா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் நடவடிக்கையை பாருங்கள். பெண்ணை எட்டி உதைத்து தாக்குகிறார்.

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கானாவில் எடுக்கப்பட்டதாகும்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் என்பவர் பெண் ஒருவரை நெஞ்சில் எட்டி மிதித்து தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”என்ன நடக்கிறது நாட்டில்?. இதுபோன்ற அரசியல் வியாபாரிகள் / அதிகாரிகள் பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் நடவடிக்கையை பாருங்கள்! இவர் தான் கூட்டுறவு வருவாய் துறைக்கு வரவேண்டாம் என முதல்வரிடம் மனு அளித்தவர்!.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

தமிழ்நாடு அரசு
Screenshot from Facebook/Balamurugan

Facebook Link

Screenshot from Facebook/mjbalasubrammani.mjb

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

Fact Check/Verification

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் என்பவர் பெண் ஒருவரை தாக்குவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது deccan chronicle கடந்த ஜூன் 18, 2018ல் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. ”TRS MPP President Immadi Gopi, an ex-Naxal, kicks woman on chest” என்கிற தலைப்பில் வெளியாகியிருந்த அந்த செய்தியில் தற்போது வைரலாகும் வீடியோவின் காட்சி புகைப்படமாக இடம்பெற்றுள்ளது.

அதன்படி, வைரலாகும் சம்பவம் நடைபெற்றது தெலுங்கானா என்றும், நிஜாமாபாத் இந்தல்வாய் கிராமத்தில் நிலத்தகராறில் தன்னை செருப்பால் அடித்த நில உரிமையாளரான பெண்ணை இம்மாடி கோபி என்னும் TRS MPP தலைவர் தாக்கியுள்ளார் என்கிற செய்தி தெளிவாக வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ, தெலுங்கானாவின் பல்வேறு சேனல்களில் கடந்த 2018ஆம் ஆண்டே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்கு புதிய தலைவராக அமிர்தகுமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி கடந்த ஜூன் மாதம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வைரல் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு முதலே பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

Conclusion

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் என்பவர் பெண் ஒருவரை தாக்குவதாகப் பரவும் வீடியோ எடுக்கப்பட்டது தெலுங்கானாவில் என்பதும், அதில் இருப்பவர் இம்மாடி கோபி என்கிறவர் என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Report From, Deccan Chronicle, Dated June 17, 2018
YouTube Video From, ABN Telugu, Dated June 18, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular