வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckGoogle Pay உள்ளிட்ட UPI செயலிகளில் பணம் அனுப்புவதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம்...

Google Pay உள்ளிட்ட UPI செயலிகளில் பணம் அனுப்புவதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று பரவும் தவறான தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
Google Pay உள்ளிட்ட UPI செயலிகளில் பணம் அனுப்புவதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம்.

Fact
PPI எனப்படும் ப்ரீபெய்டு வாலட்கள் மூலமாக பணம் அனுப்பும்போது, அதைப்பெறும் வணிக நிறுவனங்களுக்கே இது பொருந்தும்.

Google pay, BHIM உள்ளிட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.

Screenshot from Facebook/waheedurr
Google Pay உள்ளிட்ட
Screenshot From Facebook/anbu.kumaran.37
Screenshot from Facebook/cinnakadavul

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கோமிய பானம் மூலமாக மக்களின் தாகம் தீர்ப்போம் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Fact Check/Verification

Google pay உள்ளிட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்பதாக பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று, NPCI சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததது. அதன்படி, PPI எனப்படும் Prepaid Payment Instruments உபயோகித்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்தால், வணிகப்பயன்பாட்டிற்கு ரூபாய் 2000க்கு மேலான பரிமாற்றத்திற்கு 1.1% வரை கட்டணம் வசூலிக்கப்படும்; குறிப்பிட்ட வணிகப்பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, Google pay, BHIM போன்ற UPI மூலமாக செய்யப்படும் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் என்பதாக பரவிய செய்தி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. பல்வேறு செய்திகளும் UPI பரிவர்த்தனைகளுக்கே கட்டணம் என்பதாக இதை விவரித்திருந்ததன. PIB அவை தவறான புரிதலில் பரவுகிறது என்று தொடர்ச்சியாக விளக்கமளித்து வருகிறது.

அன்றாட வாழ்க்கையில் காய்கறி வாங்குவதற்கு கூட மக்கள் Google pay போன்ற UPI பணபரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், குறிப்பிட்ட அறிவிப்பு அனைத்து Google Pay உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கும் என்பதாக பரவியதைத் தொடர்ந்து, NPCI மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில், UPI பணபரிவர்த்தனையில் கட்டணம் எதுவும் கிடையாது; PPI எனப்படும் ப்ரீபெய்ட் வாலட் மூலமாக செலுத்தப்படும் 2000 ரூபாய்க்கு அதிகமான பணபரிவர்த்தனைகளுக்கு வணிகம் செய்பவர்களிடம் இருந்தே கட்டணம் வசூலிக்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விகளுக்கான பதில்களையும் விளக்கங்களையும் இங்கே பார்ப்போம்.

UPI என்றால் என்ன?

UPI அதாவது Unified Payments Interface மூலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை ஸ்மார்ட்போன் ஒன்றின் மூலமாகவே கையாள முடியும். Account Number, IFSC எண் போன்றவையின்றி எளிதாக UPI உபயோகிக்கும் மற்றொரு நபருக்கு பணம் அனுப்ப முடியும்.

PPI பரிவர்த்தனை என்றால் என்ன?

PPI, அதாவது Prepaid Payment Instruments எனப்படும் பணப்பரிமாற்ற முறைகள், நீங்கள் முன்னதாக பணத்தை டிஜிட்டல் முறையில் சேமித்து பயன்படுத்தும் வகையிலான முறை ஆகும். Paytm Wallet, PhonePe Wallet, Amazon Pay Wallet போன்றவை இந்த PPI சேவையின் கீழ் வரும்.

UPI மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வதற்கு கட்டணமா?

UPI மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வதற்கோ, ஒருவருக்கொருவர் பணம் அனுப்பிக்கொள்வதற்கோ கட்டணம் இல்லை. UPI செயலிகளில், அதாவது கூகுள்-பே போன்ற செயலிகளில் இருந்து நீங்கள் ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவருடைய வங்கிக்கணக்கிற்கோ, தனிநபர் வங்கிக்கணக்கில் இருந்து வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கோ பணம் அனுப்பும்போது அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

NPCIயின் புதிய நடைமுறை சொல்வது என்ன?

NPCI சுற்றறிக்கையின்படி, நீங்கள் ஒரு பொருள் வாங்கிவிட்டு UPI மூலமாக பணம் செலுத்தினால் அதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், wallet எனப்படும் Paytm போன்ற PPI முறையில் 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும்போது குறிப்பிட்ட வணிகரிடம் இருந்து அதற்கு குறிப்பிட்ட சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். P2PM (Peer-To-Peer Merchant) எனப்படும் மாதத்திற்கு 50,000க்கும் குறைவான அல்லது அதற்கு இணையான UPI பரிவர்த்தனைகள் கொண்ட வணிக நிறுவனங்களுக்கும் இந்த கட்டணம் கிடையாது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் வங்கிக்கணக்கிற்கு ஒரு பாலமாக செயல்படும் Google pay போன்ற UPI செயலிகள் மூலமாக பணம் அனுப்ப எந்த கட்டணமும் இல்லை.

ஆனால், வாலட் எனப்படும் டிஜிட்டல் பர்ஸ்களில் நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் பணம் மூலமாக 2000 ரூபாய்க்கு அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது குறிப்பிட்ட வணிகரிடம் இருந்து 1.1% வரையில் இடைமாற்ற கட்டணம் வசூலிக்கப்படும்.

Interchange Fee என்றால் என்ன?

வாடிக்கையாளர் ஒரு வணிக நிறுவனத்திலோ அல்லது கடையிலோ Paytm Wallet மூலமாக பொருளை வாங்கினால், அதற்கு இடைமாற்ற கட்டணத்தை குறிப்பிட்ட வணிக நிறுவனம், Wallet சேவையைத் தரும், அதாவது நம்முடைய உதாரணமான Paytm நிறுவனத்திற்கு இடைமாற்றக்கட்டணத்தை நாம் பொருள் வாங்கிய வணிக நிறுவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம், சிறு, குறு நிறுவனங்களை விட அதிகளவிலான டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை வாலட் சேவையில் பெறும் நிறுவனங்கள் மூலமாக PPI சேவையைத் தரும் நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

Paytm, Phonepe, amazon pay போன்ற நிறுவனங்கள் இதன் மூலமாக அவர்கள் அளிக்கும் வணிகப்பயன்பாட்டிற்கு முழுப்பலன்கள் கிடைக்கும் என்று NPCI தெரிவித்துள்ளது.

வாலட்களை மீண்டும் நிரப்ப வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?

வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், 2000க்கும் மேற்பட்ட அளவில் வாலட்டில் பணம் வரவு வைத்தால் உங்களுடைய வங்கிக்கு குறிப்பிட்ட வாலட் சேவை நிறுவனம் 0.15% வரையில் சேவை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இவை எதுவுமே தனிநபருக்கான கட்டணம் அல்ல. வணிக நிறுவனங்களுக்கே இந்த கட்டணம் பொருந்தும்.

தற்போது, Paytm நிறுவனமும் தங்களுடைய சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளது.

Conclusion

Google pay உள்ளிட்ட UPI செயலிகளில் பணம் அனுப்புவதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று பரவுகின்ற தகவல் தவறான புரிதலில் பரவுகிறது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Twitter Post From, PIB, Dated March 29, 2023
Twitter Post From, NPCI, Dated March 29, 2023
Twitter Post From, CNBC-TV18, Dated March 29, 2023
Twitter Post From, Paytm, Dated March 29, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular