Claim: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்
Fact: தேர்தல் அதிகாரிகள் எடுத்துச் சென்ற கூடுதல் வாக்கு இயந்திரங்களே உடைக்கப்பட்டது.
கர்நாடகாவில் ஒரே கட்டமாக நேற்று பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவரின் காரில் வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதனை கண்ட பொதுமக்கள் ஆத்திரமுற்று அந்த காரையும், வாக்கு இயந்திரங்களையும் அடித்து நொறுக்கியதாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் இத்தகவல் தவறானது என்பது தெரிய வந்தது.
வைரலாகும் இச்சம்பவம் கர்நாடகாவின் விஜயநகர் மாவட்டத்திலுள்ள மசபினல் கிராமத்தில் நடந்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூடுதல் தேவைக்காக வைத்திருந்த வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும்போது இச்சம்பவம் நடந்ததாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து தேடியதில் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி இச்சம்பவம் குறித்து பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில்,
“கூடுதல் வாக்கு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கொண்டு செல்லும்போது, அவற்றை வாக்கு செலுத்திய இயந்திரங்கள் என்று தவறாக எண்ணி, பொதுமக்கள் அந்த இயந்திரங்களை பிடுங்கி, அவற்றை அடித்து நொறுக்கினர். கூடவே இயந்திரங்களை கொண்டு சென்ற அதிகாரிகளையும், அவர்கள் பயணித்த காரையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கலவரக்காரர்களை தடுத்து, 24 பேர் மீது வழக்கு தொடுத்தனர்’’
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகுவது யாதெனில்,
- பொதுமக்கள் வாக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்கியது உண்மையே. ஆனால் அந்த வாக்கு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அல்ல, அவை வாக்களிக்கும் இயந்திரங்கள் பழுதுப்பட்டால் மாற்றப்படும் கூடுதல் இயந்திரங்களாகும்.
- அதேபோல் அந்த கூடுதல் இயந்திரங்களை கொண்டு சென்றது பாஜக எம்எல்ஏ அல்ல, தேர்தல் அதிகாரிகளாவர்.
Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!
Conclusion
கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஒருவரின் காரில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Youtube video from Thanthi TV, Dated May 10, 2023
Press release from Chief Electoral Officer, Karnataka, Dated May 10, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)