சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தன் மகளை நான் வேறு வீட்டிற்கு அனுப்ப விரும்பாமல் திருமணம் செய்தேன் என் ம(கள்)னைவி 2மாதம் கர்ப்பம். #வாழ்கமார்க்கம். இப்பப் புரியுதா இவனுங்க சொரியானை ஏன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறானுங்கன்னு #அமைதிமார்க்கஆயிஷாக்கள்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ராஜ் தாக்கூர் என்கிற நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
அதில், “Full Video On Facebook :- Raj Thakur. This Video Is Totally Scripted Not Real” என்கிற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து, இது போன்று பல்வேறு சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், அவருடைய யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோக்கள் இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.

தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் ஒரு யூடியூபர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோவை போலியாக பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலம் உறுதியாகியது.
Conclusion
சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, Raj Thakur, Dated March 06, 2025
YouTube Video From, @RajThakurrrrOfficial, Dated March 05, 2025