பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க் மற்றும் ட்ரம்பை நேரில் சந்தித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”உற்சாகத்துடன் பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் : குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு!!” என்று வெளியாகியுள்ள செய்தியிலும் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க் மற்றும் ட்ரம்பை சந்தித்ததாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது இப்புகைப்படம் முழுமையாக இடம்பெற்றிருந்த பதிவுகள் நமக்குக் கிடைத்தன.

அதில், XAI ஆன Grok வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. மேலும், பூமிக்கு திரும்பியவுடன் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் உடன் சந்திப்பு நிகழ்த்தியதாக எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தை AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டறியும் Hive Moderation மூலமாக ஆராய்ந்தபோது அப்புகைப்படம் 99.6% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து, sight engine tool மூலமாக இப்புகைப்படத்தை ஆராய்ந்தபோது அப்புகைப்படம் 99% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தது.

Also Read: அரசு பள்ளியில் சீருடையுடன் காதல் பாடலுக்கு மாணவர்கள் நடனம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க் மற்றும் ட்ரம்பை சந்தித்ததாக பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.