Fact Check
நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள்
Fact
வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அண்ணே நீ குசும்பு காரன் @TVKVijayHQ
” என்று இந்த நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடினாரா விஜய்?
Fact Check/Verification
நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் Newstamil24x7 வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய் மற்றும் விஜயகாந்த் இணைந்திருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் வைத்திருந்ததாக செய்தி புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும், News 18 tamil Nadu வெளியிட்டுள்ள செய்தியிலும் இப்புகைப்படம் வேறொரு கோணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட புகைப்படமே எடிட் செய்யப்பட்டு அதில் விஜய் மற்றும் திரிஷா இருப்பதாகப் பரப்பப்படுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: விஜய் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதா?
Conclusion
நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, NewsTamilTV24x7, Dated September 20, 2025
Instagram Post By, News 18 Tamil Nadu, Dated September 20, 2025