Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தேசியக்கொடி, விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது பாஜகவினரால் அகற்றப்பட்டு அங்கு பாஜக கொடியை ஏற்றியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் பல நாட்களைக் கடந்து நடைபெற்று வருகின்றது.
வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து இப்போராட்டம் விவசாயிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த குடியரசு தின நாளன்று, விவசாயிகள் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணி ஒன்றினையும் நடத்தியிருந்தனர்.
இப்பேரணியை போலீசார் தடுத்த நிறுத்த முற்பட்டபோது இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. சில கட்சியைச் சார்ந்த சமூக விரோதிகள் இப்பேரணியில் கலந்ததாலேயே இக்கலவரங்கள் ஏற்பட்டதாக விவசாய சங்கங்கள் கூறியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது இந்திய தேசியக்கொடி அகற்றப்பட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், அதில் ”விவசாயிகள் ஊர்வலத்தில் பயங்கரவாத RSS கும்பல்” என்கிற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
https://www.facebook.com/photo?fbid=861194631346649&set=a.186276205505165
Archived Link: https://archive.vn/XkGHp
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை எடிட் செய்து, ரிவர்ஸ் இமேஜ் சர்ச்க்கு உட்படுத்தினோம்.
அதன் முடிவில், கடந்த சில வருடங்களாகவே இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை நம்மால் அறிய முடிந்தது.
இந்நிலையில், கெட்டி இமேஜஸ் என்னும் புகைப்படங்களை விற்பனை செய்யும் தளம் ஒன்றில் இப்புகைப்படம் இருப்பதை நாம் அறிந்து கொண்டோம்.
அப்புகைப்படத்தில், 2011 ஆம் ஆண்டு தனி தெலங்கானா அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே, டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது, தேசியக்கொடியை அகற்றிவிட்டு பாஜக கொடியை ஏற்றியவர்கள் என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
எனவே, நியூஸ்செக்கர் தமிழ் வாசகர்கள் யாரும் இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Getty Images: https://www.gettyimages.in/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024