வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

HomeFact Checkஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டாரா?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டாரா?

Authors

Vasudha Beri

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 2013 ஆம் ஆண்டில் பல்கேரியாவில் நடந்ததாகும். பல்கேரிய நாட்டில் இயங்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு எதிராக இச்சம்பவம் நடந்துளது.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்ற உறுப்பினர் (கெனசட்) ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

Post Link | Archive Link

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

Archive Link

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?

Fact Check/Verification

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் ‘ஆன் டிமாண்ட் நியூஸ்’ எனும் யூடியூப் பக்கத்தில் பல்கேரிய நாட்டின் அரசியல் கட்சித் தலைவர் அகமது தோகன் தொலைக்காட்சி கூட்டம் ஒன்றில் பங்குப்பெற்றிருக்கும்போது, அவர் முன் பொதுமக்களில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததாக கூறி வைரலாகும் இவ்வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவானது 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவிடப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

தொடர்ந்து தேடுகையில் அசோஸியேட்டட் பிரஸ் யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ இதே தகவலுடன் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

தொடர்ந்து தேடுகையில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர் பெயர் ஓக்தாய் எனிமேமெதாவ் என்றும், அவர் பயன்படுத்திய துப்பாக்கியில் உண்மை குண்டு இல்லாமல் பெப்பர் ஸ்பிரேவும் ஒலியை எழுப்பும் இரண்டு குண்டுகளுமே இருந்ததாக தி கார்டியன் வெளியிட்டிருந்த செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வுக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அவ்வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளானவர் பல்கேரிய நாட்டின் அரசியல் கட்சித் தலைவர் அகமது தோகன் ஆவார்.
  2. இந்நிகழ்வு இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நடக்கவில்லை; பல்கேரியா நாட்டில் தொலைக்காட்சி கூட்டம் ஒன்றில் நடந்துள்ளது.
  3. அதேபோல் துப்பாக்கியுடன் வந்த நபர் இஸ்ரேலிய கெனசட் இல்லை; பல்கேரியா நாட்டை சார்ந்த ஒரு நபராவார்.
  4. வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடந்ததல்ல; 2013 ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடந்ததாகும்.

Also Read: சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video By @OnDemandNew, Dated January 19, 2013
YouTube Video By AP, Dated January 19, 2013
Report By The Guardian, Dated January 20, 2013

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

Vasudha Beri

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular