Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோ.
இத்தகவல் தவறானதாகும். இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் தேவையில்லாமல் ஈரான் மீது தாக்குதலை ஏற்படுத்தி எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி நாங்கள் இன்று துன்பத்தில் உள்ளோம் என்று சொல்லி அடித்து துவைக்கும் காட்சி தான் இவை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்களா?
இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து முன்னதாக இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றதா என ஆராய்ந்தோம். அதில் இவ்வாறு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு ஊடகச் செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் நியூயார்க் போஸ்ட் ஊடகத்தில் “Family of Oct. 7 hostages, Knesset guards brawl ahead of Netanyahu speech: ‘Is this how bereaved families are treated?'” என்று தலைப்பிட்டு இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது மார்ச் 3, 2025 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் 1200க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 251 பேருக்கு மேல் பிணை கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இஸ்ரேல் பாராளுமன்ற பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவே இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்டோபர் 7, 2023 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கம் தவறியது குறித்த விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையை ஆதரிக்க இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அவர்கள் கூடியதாகவும், அவர்களை பாராளுமன்றத்தில் நுழைய விடாமல் பாதுகாவலர்கள் தடுத்ததாகவும், இதை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தள்ளுமுள்ளில் இரண்டு பேர் காயமுற்றதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் இஸ்ரேலிய பிரதமர் நெதான்யு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பு நடைப்பெற்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் நியூஸ் 18, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களில் இதே தகவலுடன் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை நியாயப்படுத்தி பேசினாரா சேகர் பாபு?
இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானாதாகும். அக்டோபர் 7 சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற பாதுகாவலர்களுக்கும் இடையே இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு வீடியோ இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from New York Post, Dated March 3, 2025
Report from News 18, Dated March 4, 2025
Report from The Times of Israel, Dated March 3, 2025
Report from Al Jazeera, Dated March 4, 2025