Tuesday, February 25, 2025
தமிழ்

Coronavirus

நியூசிலாந்து பிரதமர் கொரானா நீங்கியதற்காகக் கோயிலுக்குச் சென்றாரா?

banner_image

நியூசிலாந்து பிரதமர் கொரானாவிலிருந்து முழுமையாக வெற்றிக்கொண்டதற்காக ராதா கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செய்தார் என்றச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நியூசிலாந்து பிரதமர் குறித்து வைரலாகும் வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட்.
வைரலாகும் வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்.

Fact Check/Verification

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கொரானாவிலிருந்து முழுமையாக வெற்றிக்கொண்டதற்காக ஆக்டன் நகரில் உள்ள ராதா கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செய்தார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வைரலாகும் வீடியோ.

இதைப் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்ளில் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய  நியூஸ் செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

நியூசிலாந்தில் கொரானா முழுமையாக நீங்கிவிட்டது என்று நியூஸிலாந்து பிரதமர் ஜூன் மாதம் அறிவித்தார். இதுக்குறித்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தது.

இதுக்குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளிவந்திருந்தது.

நியூசிலாந்து பிரதமர் குறித்து புதிய தலைமுறையில் வந்தச் செய்தி.
புதிய தலைமுறைச் செய்தி.

ஆயினும் நியூஸிலாந்து பிரதமர் இவ்வாறு அறிவித்து, 102 நாட்கள் ஆனப்பின் ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேருக்கு கொரானாத் தொற்று உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதைச் சரிசெய்ய நியூஸிலாந்து அரசு முயற்சித்து வருகிறது.

இதுக்குறித்து தினத்தந்தியில் செய்தி வெளிவந்திருந்தது.

நியூசிலாந்து பிரதமர் குறித்து தினத்தந்தியில் வந்தச் செய்தி.
தினத்தந்திச் செய்தி.

இந்நிலையில் வைரலாகும் வீடியோவில்  உண்மைத் தன்மைக் குறித்து அறிய, இச்சம்பவம் குறித்து கூகுளில் ஆராய்ந்தோம். அதன்பின் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நம்மால் உணர முடிந்தது.

நியூஸிலாந்துப் பிரதமர் ராதா கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றது உண்மையே. ஆனால் அவர் கொரானா நீங்கியதற்காக நேர்த்திக்கடன் செய்ய சென்றார் என்ற தகவல் முற்றிலும் தவறானது.

நியூஸிலாந்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது.  பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே தலைநகர் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணர் கோவிலுக்கு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் சென்றுள்ளார்.

இதுக்குறித்து தினமலரில் செய்தி வெளிவந்திருந்தது.

நியூசிலாந்து பிரதமர் குறித்து புதிய தினமலரில் வந்தச் செய்தி.
தினமலர் செய்தி.

பிரதமரின் இந்த வருகையில் இந்தியத் தூதர் முக்தேஷ் பர்தேஷியும் கலந்துக்கொண்டார். அதை வீடியோவிலும் நம்மால் காண முடிந்தது. இதுக்குறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முக்தேஷ் பர்தேஷி டிவீட்

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் நியூஸிலாந்துப் பிரதமர் கொரானா நீங்கியதற்காக ராதாகிருஷ்ணர் கோயிலுக்காகச் சென்றார் என்றத் தகவல் தவறானது என்று நமக்குத் தெளிவாகிறது. அவர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கோவிலுக்குச் சென்றுள்ளார் என்பதே உண்மையாகும்.

Result: Misleading


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/hosur123/posts/3100254586753891

YouTube: https://www.youtube.com/watch?v=qHtpRNQyVGQ

Muktesh Pardeshi‘s Tweet: https://twitter.com/MukteshPardeshi/status/1291991068905369600

Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2591362

Dailythanthi: https://www.dailythanthi.com/News/World/2020/08/13053418/How-did-the-virus-spread-again-in-New-Zealand–Confirmation.vpf

Puthiya Thalaimurai: https://www.puthiyathalaimurai.com/newsview/71654/Covid-free-New-Zealand–There-are-now-ZERO-active-Covid-19-cases-in-the-country


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,241

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.