Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: தாயுடன் தொட்டபெட்டா சாலையை கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ இமாச்சல பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாகும்.
நீலகிரி தொட்டபெட்டாவில் உலாவரும் சிறுத்தைகள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”தாயுடன் தொட்டபெட்டா சாலையை கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ ” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
நீலகிரி தொட்டபெட்டாவில் உலாவரும் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ZeeNews இதுதொடர்பாக, கடந்த செப்டம்பர் 07, 2024 அன்று வைரலாகும் வீடியோவுடன் வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது.
இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பரோட் சாலையில் இரவு நேர ரோந்துப்பணியில் வனத்துறை அதிகாரி சிவம் ரத்னா மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தபோது சிறுத்தை ஒன்று தன்னுடைய நான்கு குட்டிகளுடன் சாலையை கடப்பதை அவர்கள் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதே செய்தி The Tribune, MonalExpress உள்ளிட்ட ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட வீடியோவே தற்போது நீலகிரி தொட்டபெட்டா என்பதாக வைரலாகிறது.
Also Read: சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் 2015 ஆம் ஆண்டின் படம்!
Conclusion
நீலகிரி தொட்டபெட்டாவில் உலாவரும் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from, ZeeNews, Dated September 07, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.