புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலாவும் இரண்டு சிறுத்தைகள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Facebook/skkumar.skkumar.984786

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Fact check/Verification

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலாவும் சிறுத்தைகள் என்று பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவில் சிறுத்தை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்கு ஜாகுவார் எனப்படும் பெரும்பூனை வகையைச் சேர்ந்தவை. தென்அமெரிக்க வம்சாவழித் தோற்றம் கொண்ட இவை பெரும்பாலும் தென் அமெரிக்க பகுதிகள், மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட இடங்களில் காணக்கிடைப்பவை. நீர்வாழ் வசிப்பிடங்களை வாழ்விடமாகக் கொண்டவை.

எனவே, வைரல் வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் அதனை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அப்போது, நமக்கு போர்ச்சுகீசிய மொழியில் வெளியாகியிருந்த செய்திக்கட்டுரை ஒன்று கிடைத்தது. அதில், “Couple of jaguars is caught ‘living’ in a farmhouse in MS” என்று போர்ச்சுகீசிய மொழியில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

மேலும், “A couple of jaguars were spotted living in an apparently empty house that is part of the Cristo Redentor Farm , in Miranda, in the Retiro Acurizal region.” என்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Juma&Jove என்கிற கதாப்பாத்திர காதலர்கள் பெயரில் இந்த வீடியோ அங்கு பரவியதைத் தொடர்ந்து மேற்கண்ட கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோவை முதலில் பதிவிட்டவர் dr.brunofernandesvet என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை, கடந்த அக்டோபர் 09, 2022 அன்று Dr.BrunofernandesVet பதிவிட்டுள்ளார். பிரேசிலிய கால்நடை மருத்துவரான இவர் ”Jaguar couple, living inside one of the houses. Here we raise them in house” என்று இந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதிலிருந்து, குறிப்பிட்ட வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்பது உறுதியாகிறது.

Instagram will load in the frontend.

Also Read: மக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் பொய்யான வீடியோ தகவல்!

Conclusion

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலாவும் சிறுத்தைகள் என்று பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Report From MidiaMax, Dated October 10, 2022
Instagram Post From, Bruno Fernandes, Dated October 09, 2022
Article From, Natural Habitat Adventures
Article From, www.scientificamerican.com
Report From, pantanalescapes




(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular