Fact Check
`நிவர்’ புயல் மழையால் மூழ்கியதா சென்னை காசி தியேட்டர் பாலம்?

நிவர் புயலால் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் காசி தியேட்டர் பாலம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து மூழ்கியிருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

Fact check/ Verification:
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றாழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்து அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது.
நிவர்
என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இப்புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைந்து புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் முழுமையாக கரையைக் கடந்தது.
இந்நிலையில், சென்னையின் புகழ் பெற்ற காசி தியேட்டர் மற்றும் பாலம் நீரில் மூழ்கியதாக வீடியோ ஒன்று வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோவானது, உண்மையில் நிவர் புயலில் எடுக்கப்பட்ட வீடியோவா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சமூக வலைத்தளங்களில் காசி தியேட்டர் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது எனப் பரவி வரும் வீடியோ உண்மையில் நிவர் புயல் மழையில் எடுக்கப்பட்டதா என்பதை அறிய அந்த வீடியோ குறித்து ஆய்வு செய்தோம்.
நிவர் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக புதன்கிழமையன்று சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள காசி தியேட்டர் அருகே அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, அப்பகுதியே வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், நம்முடைய ஆய்வின் முடிவில் அந்த வீடியோ பழைய வீடியோ என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது. இந்த வீடியோ, கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சென்னை பெருவெள்ள ஊழிக் காலத்தின் போது மெட்ரோ ரயிலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டே யூடியூபில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
2015 ஆம் ஆண்டு வீடியோ:
மேலும், கலைஞர் செய்திகள் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களும் இதுகுறித்த உண்மைத்தன்மை சோதனையை வெளியிட்டுள்ளன.
எனவே, ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோ நிவர் புயல் மழையில் எடுக்கப்பட்டது அல்ல என்பது தெளிவாகிறது.
Conclusion:
எனவே, நிவர் புயல் மழையால் காசி தியேட்டர் பாலம் மூழ்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோவானது தவறானது; பழைய வீடியோ என்பதை நியூஸ்செக்கர் தழிம் சார்பில் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.
Result: Misleading
Our sources:
Youtube: https://youtu.be/OLzJ-oW7v6w
Twitter: https://twitter.com/Kalaignarnews/status/1331561340964544515?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)