வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkஇஸ்லாமியர்கள் உணவு கொடுக்கும் புகைப்படம் நிவர் புயலின்போது எடுக்கப்பட்டதா?

இஸ்லாமியர்கள் உணவு கொடுக்கும் புகைப்படம் நிவர் புயலின்போது எடுக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நிவர் புயல் சமயத்தில் இஸ்லாமியர்கள் உணவு அளிப்பதாக, புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இஸ்லாமியர்கள் குறித்து பரவும் புகைப்படம்
வைரலாகும் புகைப்படம்

Fact Check/Verification

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து வந்து, கடந்த புதன்கிழமை (25/11/2020)  புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

நிவர் புயலின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவர்களுடன் பலக் கட்சியைச் சார்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், மீனவ மக்கள் எனப் பலரும் களத்தில் இறங்கி உழைத்து வருகின்றனர்.

இவர்களுள் முஸ்லீம் மக்களும் இனம், மதம் பாகுபாடின்றி அவர்களால் இயன்றதை பொது மக்களுக்கு செய்து வருகின்றனர். இவர்களின் இந்த தொண்டை மேற்கோள் காட்டியும், பாஜகவினரை சாடியும், சுந்தரவள்ளி அவர்கள்,

“புயலுக்கு முன்பே களத்தில் நிற்கும் எங்கள் இஸ்லாமிய உறவுகள்…

வேல புடிச்சு தொங்காம வீதிக்கு வாங்கடா சங்கீஸ்….”

 என்று ஒரு பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கூடவே, இஸ்லாமியர்கள் மக்களுக்கு உணவு அளிக்கும் ஒரு புகைப்படத்தையும் இப்பதிவுடன் இணைத்துள்ளார்.

மேலும் இதேப் புகைப்படத்தை பகிர்ந்து, பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இப்புகைப்படமானது உண்மையிலேயே நிவர் புயலின் போது எடுக்கப்பட்டதா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

இந்த நிவர் புயல் காலத்தில் இஸ்லாமியர்கள் உணவு அளித்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

அவ்வாறு ஆய்வு செய்ததில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படமானது, தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை எனும் உண்மை நமக்குத் தெரிய வந்தது.

உண்மையில் இப்புகைப்படமானது 2015 ஆம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டதாகும். 2015 ஆம் ஆண்டு வந்த சென்னையில் வெள்ளம் வந்தபோது பலர் தங்களால் முடிந்த பல விஷயங்களை செய்தனர். அவர்களுள், இஸ்லாமியர்கள் மற்றும் மீனவ மக்களின் தொண்டு மிகவும்  குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு, சென்னையில் வந்த வெள்ளத்தில் இஸ்லாமிய மக்களின் தொண்டு குறித்து https://khanbaqavi.blogspot.com எனும் பிளாக் இணையத் தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அக்கட்டுரையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படமும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இஸ்லாமியர்கள் 2015 இல்உஹவியது.
Source: Google search/screen shot

இதன்மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு தெளிவாகிறது.

 Conclusion

நிவர் புயலின் போது இஸ்லாமியர்கள் உணவு அளிப்பதாக சமூக வலைத்தளங்களில், சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பகிர்ந்த புகைப்படம் தவறானது என்பதையும், உண்மையில் அப்புகைப்படம் 2015 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்போ எடுக்கப்பட்டப் படம் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Dr.Sundaravalli: https://twitter.com/Sundara10269992/status/1331615273476976647

Twitter Profile: https://twitter.com/AnAmbedkarite/status/1331577008871010305

Twitter Profile: https://twitter.com/Syedabudtahir/status/1331603265528733697

Khanbaqavi: https://khanbaqavi.blogspot.com/2015/12/blog-post.html

Twitter Profile: https://twitter.com/APJ_BUILDERS1/status/1331588134799167488


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular