வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை ஒத்திருக்கும் இளம்பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை ஒத்திருக்கும் இளம்பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஜெயலலிதா திரைத் துறையில் ஜொலித்த போது இருந்த மாதிரி தோற்றத்தில் இப்போதைய பெண்

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் இருப்பவர் நடிகை நிவேதா தாமஸ்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தில் வலம் வரும் இளம்பெண் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா திரைத் துறையில் ஜொலித்த போது இருந்த மாதிரி தோற்றத்தில் இப்போதைய பெண் ஒருவர்..வலம் வருகிறார்” என்று இந்த வீடியோ காட்சி பரவி வருகிறது.

Screenshot from X @Jayaram9942Blr

X Link/Archived Link

Screenshot from X @Healthymahaa55

X Link/Archived Link

Screenshot from X @Pugal0405gmail4

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

Fact Check/Verification

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை ஒத்திருக்கும் இளம்பெண் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகிய வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோவில் உண்மையில் இடம்பெற்றிருப்பது நடிகை நிவேதா தாமஸ் என்பது நமக்குத் தெரியவந்தது.

நிவேதா தாமஸ் நடித்து வெளியாகிய 35-Chinna Katha Kaadu என்கிற திரைப்படத்தின் Pre-Release நிகழ்வு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில் அதில் அவர் கலந்து கொண்ட வீடியோவில் இருந்து சில பகுதிகளை எடுத்து அவரது முகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முகத்தை எடிட் செய்து மாற்றியுள்ளனர் என்பது உறுதியாகியது.

குறிப்பிட்ட வீடியோவே தற்போது ஜெயலலிதா போன்றே வலம் வரும் இளம்பெண் என்று எடிட் செய்யப்பட்டு பரவி வருகிறது.

 Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

Conclusion

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை ஒத்திருக்கும் இளம்பெண் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
YouTube Video From, 10TV Entertainment, Dated September 04, 2024
YouTube Video From Mana Stars, Dated September 03, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular