ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் எழுதியிருப்பதாக பரவும் எடிட் படம்!

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் எழுதியிருப்பதாக பரவும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். உண்மையில் அப்படத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிடவில்லை.

‘இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை’ என்று எழுதப்பட்ட பலகையை ஆண் ஒருவர் அவரது வாகனத்தில் கட்டியிருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம்

X Link | Archive Link

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம்

X Link

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படத்தில் ‘பாஜக கட்சிக்கு’ என்று எழுதப்பட்டிருக்கும் இரண்டு வார்த்தைகள் மட்டும் வித்தியாசமான எழுத்துருவில் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் அப்பலகையில் வேலை பிடித்துக்கொண்டிருக்கும் கை பாதி மறைக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம்

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது. இதை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் அகில பாரத இந்துசேனா எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 02, 2021 அன்றே இப்படம் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் காணப்பட்ட பலகையில் எந்த ஒரு கட்சியின் பெயரும் குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கவில்லை. ‘இந்து விரோத கட்சிகளுக்கு எங்கள் வாக்கு இல்லை’ என்று பொதுவாகவே எழுதப்பட்டிருந்தது.  

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம்

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்ய செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

 Also Read: அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். உண்மையில் அப்படத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிடவில்லை. கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook post from அகில பாரத இந்துசேனா, Dated April 02, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular