வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkகாஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!

காஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசினார்.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019 ஆண்டு ஏப்ரலில் நடந்ததாகும்.

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக வீடியோ ஒன்றை அதிமுகவை சார்ந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோ

X Link | Archive Link

இவரை தொடர்ந்து பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோ

X Link

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோ

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தாரா?

Fact Check/Verification

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 15, 2019 அன்று விகடனில் செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. காஞ்சிபுரத்தின் தேரடி பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலில் அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனத்திற்கு வந்தபோது அங்கு பிரச்சாரத்திற்காக கூடியிருந்த திமுகவினர் அவர்களது கொடியை தூக்கிப்பிடித்ததாகவும், இது தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கும் என்று ஆய்வாளர் அறிவுறுத்தியாகவும்,  இதை தொடர்ந்து எழிலரசன் ஆய்வாளரை அவமரியாதையாக பேசியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் பாலிமர் நியூஸிலும் ஏப்ரல் 15, 2019 அன்று இச்சம்பவம் குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது .

இதனையடுத்து தேடுகையில் அச்சமயத்தில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளிவந்திருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

 Also Read: கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?

Conclusion

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோவானது ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Vikatan, Dated April 15, 2019
YouTube Video from Polimer News, Dated April 15, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular