Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மழை நீரில் தத்தளிக்கும் தமிழக அரசு பேருந்து
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.
மழை நீரில் தத்தளிக்கும் அரசு பேருந்து என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்…உபிஸ் – ஒரு சொட்டு கூட தேங்கவில்லை” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
மழை நீரில் தத்தளிக்கும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, அந்த வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் கடந்த 2018ஆம் ஆண்டு “Bus fall down on road due to heavy rain in Chennai today” என்கிற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்தது நமக்குத் தெரிய வந்தது.
குறிப்பிட்ட வீடியோவை எடுத்தே தற்போதைய சென்னை மழையில் மாட்டிக்கொண்டிருக்கும் அரசு பேருந்து என்று பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலமாக உறுதியாகியது.
Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?
மழை நீரில் தத்தளிக்கும் தமிழக அரசு பேருந்து என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது; தற்போதைய புயல் மழையுடன் தொடர்புடையது அல்ல என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video From, Tamil WhatsApp status Creator, Dated November 23, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025