Fact Check
மலேசியாவில் ஜனநாயகனுக்காக நடிகை திரிஷா என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
மலேசியாவில் ஜனநாயகனுக்காக நடிகை திரிஷா
Fact
வைரலாகும் புகைப்படங்கள் தக் லைஃப் திரைப்பட விழாக்களில் எடுக்கப்பட்டவை ஆகும்.
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ள நடிகை திரிஷா என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” மலேசியாவில் அண்ணியார்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
Fact Check/Verification
மலேசியாவில் ஜனநாயகனுக்காக நடிகை திரிஷா என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த மே 31 அன்று சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதில், தக் லைஃப் திரைப்படத்தின் மலேசியா முன்னோட்ட நிகழ்வில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இதனை உறுதி செய்துகொள்ள தக் லைஃப் திரைப்படத்தின் மலேசியா நிகழ்வின் வீடியோவை Astro Ulagam ஊடக பக்கத்தில் கண்டறிந்தோம். அதில், திரிஷா ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அதில் எடுத்த புகைப்படமே வைரல் புகைப்படம் என்பது நமக்கு உறுதியாகியது.
அதேபோன்று, பரவும் மற்றொரு புகைப்படம் திரிஷா தக் லைஃப் பிரமோஷனுக்காக மும்பை சென்றபோது எடுக்கப்பட்டது என்பதாக கலாட்டா ஊடக பக்கத்தில் மே 20ஆம் தேதியன்று வெளியான செய்தி காட்சியில் இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட புகைப்படங்களே தற்போது ஜனநாயகன் இசைவெளியீடு விழாவை ஒட்டி திரிஷா மலேசியா சென்றுள்ளதாகப் போலியாக பரப்பப்படுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
மலேசியாவில் ஜனநாயகனுக்காக நடிகை திரிஷா என்று பரவும் புகைப்படம் அவர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் தொடர்பான விழாக்களில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Astro Ulagam , Dated June 03, 2025
Instagram Post From, Galattadotcom, Dated May 20, 2025