Fact Check
என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறினாரா?
Claim
என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறினார்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: காந்தி சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடினாரா?
Fact
என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்டில் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

மாநிலத் தலைவர் என்பதற்கு பதிலாக துணைத்தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இந்த நியூஸ்கார்டு குறித்து தேடினோம். அத்தேடலில் மார் 3, 2021 அன்று வைரலாகும் இந்த நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் டாப் தமிழ் நியூஸ் ஊடகமும் இதே தகவலை மார்ச் 3, 2021 செய்தியாக வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. நயினார் நாகேந்திரன் நெல்லையில் இக்கருத்தை பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று பரவும் புகைப்படச்செய்தி உண்மையா?
இதன்படி பார்க்கையில் நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் பாஜக துணைத்தலைவராக இருந்தபோது பேசிய கருத்தை, அண்மையில் பாஜக மாநிலத்தலைவராக பதவியேற்றப்பின் பேசியதாக தவறாக பரப்பப்படுகின்றது என அறிய முடிகின்றது.
Sources
Report by Sun News, dated March 3, 2021
Report by Top Tamil News, dated March 3, 2021