Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் AR Dairy foods நிறுவனம்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள நிறுவனம் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகும்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் பரவலாக பேசப்படும் AR Dairy Food நிறுவனத்தின் உரிமையாளர்கள் முஸ்லீம்கள் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற முஸ்லீம் பெயர்களை பார்க்கும் போது, அசைவப் பொருட்களை பிரசாதத்தில் கலந்து பக்தர்களுக்கு சாப்பிடகொடுத்ததில் ஆச்சரியமில்லை இந்தியாவில் ஒரு வக்ஃப் வாரியத்தை வேறு ஏதேனும் முஸ்லிம் அமைப்பையோ இந்துக்கள் நடத்த முடியுமா?” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகிய நிலையில் அந்த நெய்யை வழங்கிய ஒப்பந்த நிறுவனமான AR Dairy Foods நெய்யில்தான் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அந்நிறுவனம் சார்பில் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய செய்திகளை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
இந்நிலையில், AR dairy foods நிறுவனத்தின் உயர் பொறுப்புகள் மற்றும் நிறுவனர்களாக இஸ்லாமியர்கள் இருப்பதாலேயே இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக இவ்வாறு செயல்பட்டுள்ளதாக அப்புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் பரவலாக பேசப்படும் AR Dairy Food நிறுவனத்தினர் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று பரவும் நிறுவன புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
திண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்ற AR Dairy foods நிறுவனம் குறித்து ஆராய்ந்தபோது Raaj என்கிற பெயரில் பால் பொருட்களை விற்பனை செய்யும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ராஜசேகரன் என்பதை அறிந்து கொண்டோம்.
மேலும், இந்நிறுவனத்தின் நிறுவனர்களாக ராஜசேகரன் சூர்யபிரபா மற்றும் ஸ்ரீனிவாசன் S R ஆகிய பெயர்கள் Ministry of Corporate Affairs இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. ராஜூ ராஜசேகரன் என்கிற பெயர் Managing Director என்பதாக இடம்பெற்றுள்ளது.
இதனை உறுதி செய்துகொள்ள AR dairy foods நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் பேசினோம். அப்போது அவர், AR Dairy Foods நிறுவனத்தின் நிர்வாகத்தினர் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து ராஜசேகரனைத் தொடர்பு கொள்ள நாம் முயற்சித்து வருகிறோம். அவருடைய பதிலையும் கூடிய விரைவில் இங்கே இணைக்கிறோம்.
தொடர்ந்து, வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள நிறுவனம் குறித்து ஆராய்ந்தபோது அது பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் இயங்கி வருகின்ற மளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள AR Foods Private Ltd என்பதை நாம் அறிய முடிந்தது.
Rocket Reach என்கிற நிறுவன தொடர்பு முகவரிகள் இடம்பெற்றுள்ள இணையதளத்தில் ஆராய்ந்தபோது பாகிஸ்தான் நிறுவனத்தின் தகவல்களே ஸ்க்ரீன்ஷாட் செய்யப்பட்டு பரவுகிறது என்பதையும் அறிய முடிந்தது.
Also Read: அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டதா?
திருப்பதி லட்டு விவகாரத்தில் பரவலாக பேசப்படும் AR Dairy Food நிறுவனத்தினர் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று பரவும் நிறுவன புகைப்படம் பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இந்த கட்டுரை முன்னதாக நம்முடைய Newschecker ஆங்கிலப்பதிப்பிலும் வெளியாகியுள்ளது)
Sources
RocketReach page, AR Foods (Pvt) Limited
Raaj Milk website
HT report, September 21, 2024
News18 report, September 20, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
September 25, 2024
Vijayalakshmi Balasubramaniyan
September 23, 2024