Fact Check
திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?
Fact
திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரப்பப்படும் வீடியோவில் “காளி ஆஞ்சநேயர் கோவிலில் பணம் திருடப்படும் காட்சி” என்று கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் டிவி9 கன்னடா யூடியூப் பக்கத்தில் பெங்களூர் காளி ஆஞ்சநேயர் கோவிலில் பணம் திருடப்பட்டதாக கூறி வைரலாகும் இவ்வீடியோ செப்டம்பர் 27, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்தியா டுடே, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் நவ், ஈடிவி பாரத் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவமானது பெங்களூர் காளி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்களா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் திருப்பதி கோவிலில் நடக்கவில்லை என உறுதியாகின்றது.
Sources
Report from TV9 Kannada, dated September 27, 2024
Report from India Today, dated September 30, 2024
Report from Hindustan Times, dated September 28, 2024
Report from Times Now, dated September 28, 2024
Report from ETV Bharat, dated October 1, 2024