ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 'மோடி' கோஷமா?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ‘மோடி’ கோஷமா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், அந்நாட்டு எம்.பிக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கோஷமாக எழுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து, அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாகிஸ்தானில் மோடி கோஷம்

Fact check/ Verification:

பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆசிரியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்டு விவாதம் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இடையில் பேசமுற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘மோடி மோடி’ என்று கோஷமிட்டனர் என்கிற செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் சிலர்.

Source: Twitter

பாகிஸ்தான் எம்.பிக்கள் ‘மோடி மோடி’ என்று கோஷமிடுவதைப் போன்ற குரல் சித்தரிப்பு வீடியோவுடன் இந்த செய்தியை பாஜக கட்சியினர் உட்பட பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Source: Twitter

உண்மையும், பின்னணியும்:

பாகிஸ்தான் நாடாளுமன்ற மோடி கோஷம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இந்த வீடியோ மற்றும் செய்தி குறித்து ஆராய முடிவு செய்தோம்.

தினமலர் நாளிதழில் இதுகுறித்த செய்தியின் லிங்க், ட்விட்டரில் பகிரப்பட்டிருந்தது. ஆனால், அந்த இணைப்பினை திறந்தால், அதன் முகப்பு வலைத்தளப்பக்கத்தில் அச்செய்தி நீக்கப்பட்டுவிட்டிருந்தது.

Source: Twitter

அதே போன்று டைம்ஸ் நவ் ஊடகத்திலும் இது செய்தியாக வெளியாகியிருந்தது. மேலும், பல்வேறு ஊடகங்களும் இதனை ப்ரேக்கிங் செய்தியாக வெளியிட்டு பின்பு திருத்தம் செய்திருந்தன; அல்லது இது தொடர்பான செய்தியை நீக்கியிருந்தன.

பாகிஸ்தான் மோடி கோஷம்
Courtesy: News Checker English

இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க, கூகுளில் shah mehmmood qureshi parliment speech என்று நாடாளுமன்றம் தொடர்பான வீடியோக்களில் தேடியபோது, அந்நாட்டு செய்தி ஊடகமான துனியா நியூஸ் தனது யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 26ம் தேதியன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் குரோஷி பேசிய வீடியோவை வெளியிட்டிருந்தது.

Source: Youtube

அதில், அமைச்சர் குரோஷி பேசும்போது, பின்னால் அமர்ந்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ‘வோட்டிங் வோட்டிங்’ அதாவது ‘Voting voting’ என்றே முழக்கமிடுகின்றனர். அதற்கு சபாநாயகரும், வாக்கெடுப்பு நடைபெறும் என்று அவர்களை அமைதிப்படுத்தி பேசுவதும் தெரியவருகிறது, இந்த விளக்கத்தை பிபிசி தமிழும் வெளியிட்டுள்ளது.

conclusion:

நமது விரிவான ஆய்வின் அடிப்படையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எம்.பிக்களின் கோஷம் ‘வோட்டிங் வோட்டிங்’ என்பதுவும், அதனைத் திரித்து ‘மோடி மோடி’ என்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருவதும் உறுதியாகின்றது. எனவே, நியூஸ் செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் அடிப்படையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் கோஷமிடப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

Result: Misleading

Our Sources:

BBC Tamil: https://www.bbc.com/tamil/india-54744452

News Checker English: https://newschecker.in/fact-check/modi-modi-was-not-chanted-in-pakistans-national-assembly/

Dunya News: https://www.youtube.com/watch?v=zBu_wR2TzFk&feature=emb_logo

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular