தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற கேண்டீனில் 27 ரூபாய் மட்டும் இருந்தால் போதும் ஒரு குடும்பம் திருப்தியாக சாப்பிடலாம் என்கிற அளவுக்கு மலிவாக உணவுகள் விற்கப்படுவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

நாடாளுமன்றத்தில் மலிவு விலையில் உணவு வகைகள் எம்.பிக்களுக்கு விற்கப்படுவது அவ்வப்போது விவாதத்திற்கு உள்ளாகி வருகின்ற செய்திகள்.
அவ்வகையில், “27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உண்மைதான். டீ – 1 ரூபாய், மீல்ஸ் 2 ரூபாய், பிரியாணி 8 ரூபாய். இவ்வளவு மலிவாக விற்கப்படும் இடம் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான உணவு விடுதியில்தான். பாவம் அவங்கதான் நாட்டிலேயே ரொம்ப ஏழைங்க” என்னும் புகைப்படம் இடுகைகளுடன் வைரலாகி வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற கேண்டீன் விலைப்பட்டியல் என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா என்பது குறித்து ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட அப்புகைப்படம் 2013ம் வருடத்திற்கு முன்பிருந்தே, அதாவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், கடந்த ஜனவரி 2021 முதல் எம்.பிக்களுக்கான மானிய விலை உணவுப்பட்டியல் விலை ஏற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சூப்-25 rs, தால் – 20, மீல்ஸ், சப்பாத்தி- 3, தோசை – 30 rs, பிரியாணி – 100 rs என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Conclusion:
தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற கேண்டீன் விலைப்பட்டியல் என்று பரவும் தகவல் தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: Misleading
Our Sources:
Republic world: https://www.republicworld.com/india-news/general-news/non-subsidised-parliament-canteen-rates-out-new-menus-items-range-from-rs-3-to-rs-700.html
Zee News: https://zeenews.india.com/tamil/india/parliament-canteen-subsidy-ends-know-the-price-list-355528
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)