புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkதமிழக முதல்வர் முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் மேட்டூர் அணையை திறந்து வைத்தாரா ?

தமிழக முதல்வர் முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் மேட்டூர் அணையை திறந்து வைத்தாரா ?

உரிமைகோரல் :

வீட்டில் இரு. விலகி இரு வெளியில் வந்தால் முக கவசம் கட்டாயம் – நல்ல அறிவுரை. மக்களுக்கு.

சரிபார்ப்பு :

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கூட்டமாய் அணையில் தண்ணீர் திறப்பை பூக்கள் தூவி வரவேற்கும் புகைப்படத்தை பகிர்ந்து மக்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள் என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தது. அதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் அரியத் தொடங்கினோம் .

உண்மைத் தன்மை :

புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரும் முகக்கவசம்  அணியவில்லை கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருக்கும் காலத்தில் இப்படி கூட்டமாய் இருக்க வாய்ப்பில்லை. இப்புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி ” என 2020 ஜூன் 12-ம் தேதி தினகரன் செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி உள்ளது.

https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16263&page=4

தினகரன் செய்தியில் வெளியான இப்புகைப்படமே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது பழைய புகைப்படமே. புகைப்படத்தில் சேலம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இருப்பதை காணலாம். அவர் 2019-ம் ஆண்டிலேயே இசைக் கல்லுரி பதிவாளராக பணியிடம் மாற்றப்பட்டார். 2018-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் என இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

https://timesofindia.indiatimes.com/city/salem/cm-releases-water-from-mettur-dam-for-irrigation-in-delta-regions/articleshow/65061661.cms

தினகரன் செய்தியில் வெளியான படத்தின் கீழே பழைய படம் எனக் குறிப்பிடாமல் விட்டதே இக்குழப்பத்திற்கு காரணம். அதில் இடம்பெற்ற புகைப்படத் தொகுப்பில் முதல்வர் முகக்கவசம், சமூக இடைவெளி உடன் மேட்டூர் அணையை திறந்து வைக்கும் மற்ற புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன.

https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-cm-releases-water-from-mettur-dam/articleshow/76335542.cms

முடிவுரை :

 2018-ல் மேட்டூர் அணையை நீர்பாசனத்திற்காக முதல்வர் கூட்டமாய் திறந்து வைக்கும் பொது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தினகரன் உள்ளிட்ட செய்திகளில் கோப்புக்காட்சி அல்லது பழைய புகைப்படம் எனக் குறிப்பிடாமல் வெளியிட்டதே குழப்பத்திற்கு காரணம்.

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • Newspaper

Result: False  

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular