ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என்று செய்தி ஒன்று வெளியானது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், வருகின்ற மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட உள்ளதாக செய்தி ஒன்று பரவியது.


Archived Link: https://archive.ph/6umy6
Archived Link: https://archive.ph/4o2xI
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என்கிற செய்தி பரவியதைத் தொடர்ந்து அதற்கான மறுப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரான கண்ணப்பன் வெளியிட்டார்.
அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்கிற தகவல் தவறானது; பாடங்களின் சுமையைக் குறைக்க பாடத்திட்டங்கள் குறைத்தே வகுப்புகள் நடைபெறுகின்றன. எனவே, பள்ளிகள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பள்ளி அளவில் பொதுத்தேர்வினை நடத்தி மதிப்பெண் வழங்கவும் இன்று உத்தரவிடப்பட்டு அதனை மீண்டும் வாபஸ் பெற்றுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

Conclusion:
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்று பரவிய தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Puthiyathalaimurai: https://www.youtube.com/watch?v=GuWQOdKTct0
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)