Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ
வைரலாகும் வீடியோ யாஷஸ்வி ஷர்மா என்கிற விமானப்பணிப்பெண்ணால் ஜூன் 9ஆம் தேதியன்று பதிவிடப்பட்டுள்ளது. அதற்கும், அகமதாபாத் விமான விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி..!” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ என்று பரவும் காட்சி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது அகமதாபாத்தில் விபத்தில் உயிரிழந்த ஏர் இந்திய விமானப் பணியாளர்களின் கடைசி வீடியோ அல்ல என்பது நமக்கு உறுதியானது.
கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று, யாஷஸ்வி ஷர்மா என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோவை ”ULH flight se phle ka motivation” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியிலேயே அவர், “Hi everyone,Thank you so much for reaching out – I’m safe and currently in Mumbai. I’m deeply shaken and heartbroken by what’s happened. It’s a very difficult time for us” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் உயிரிழந்த விமானப்பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதுடன், அவர்களுடன் பணிபுரிந்த தனது நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.


அவர் ஜூன் 9ஆம் தேதியன்று பதிவிட்ட வீடியோ அகமதாபாத் விபத்துடன் தொடர்புபடுத்தி பரப்பப்படுவதை கண்டித்து “போலியான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, யாஷஸ்வியிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். விரைவில் அவருடைய பதிலையும் இங்கே இணைக்கிறோம்.

அகமதாபாத் விமான விபத்தில் பலியான ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் குறித்த விவரங்கள் Times of India உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ என்று பரவும் காட்சி தவறானது; அந்த விபத்துடன் தொடர்புடையது அல்ல என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, Yashasvi Sharma, Dated June 09, 2025
Facebook Post From, Yashasvi Sharma, Dated June 09, 2025
Report From, Times of India, Dated June 13, 2025