ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஉருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை பயன்படுத்தியதா சன் நியூஸ்?

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை பயன்படுத்தியதா சன் நியூஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ் பயன்படுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ்  பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட்

கொரோனா பரவலின் தாக்கம் குறித்து விவாதிக்க தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று (16/07/2021)  வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது “உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும்; கொரோனா மூன்றாவது அலையை விரைவாக தடுக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். இந்த விஷயமானது சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.

ஆனால் சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிடும்போது, உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடி அவர்களின் சிறு வயது ஆர்.எஸ்.எஸ் படத்தையும், தற்போதைய படத்தையும் பயன்படுத்தி செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ்  பயன்படுத்தியதாக பரவும் பதிவு - 1

Archive Link

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ்  பயன்படுத்தியதாக பரவும் பதிவு - 3

Archive Link

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ்  பயன்படுத்தியதாக பரவும் பதிவு - 2

Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?

Fact Check/Verification

உருமாறும் வைரஸுக்கு உருவகமாக பிரதமர் மோடி அவர்களின் படத்தை சன் நியூஸ் பயன்படுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என்பதை உறுதி செய்ய சன் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.

நம் தேடலில் சன் நியூஸ் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிடவில்லை. வைரலாகும் அந்த நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட் என்பது நமக்கு புலனாகியது.

நம் தேடலில்  “உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும்; கொரோனா மூன்றாவது அலையை விரைவாக தடுக்க வேண்டும்” என்று ஆறு மாநில முதலமைச்சர்களுடன் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஆனால் அச்செய்தியில் பிரதமர் அவர்கள் ஒரு விரலை தூக்கியவாறு இருக்கும் படமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Archive Link

ஆனால் விஷமிகள் இப்படத்திற்கு மேல் பிரதமரின் வேறு இரு படங்களை வைத்து பொய்யான நியூஸ்கார்டை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வைராலாகும் இந்த நியூஸ்கார்ட் குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு கேட்டோம்.

அதற்கு அவர்,

இது பொய்யான நியூஸ்கார்ட், இதுபோல் பொய்யான நியூஸ்கார்ட் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று  பதிலளித்தார்.

இதிலிருந்து வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பது நமக்கு உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக்  காட்டியுள்ளோம்.

ஒப்பீடு படம்

Also Read: கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?

Conclusion

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ் பயன்படுத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட், உண்மையில் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources

Sun News: https://twitter.com/sunnewstamil/status/1415932297300168704


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular