வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkகுடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததாக பரவும் தகவல்

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அக்கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. தற்போது நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் போன்றவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில்‘குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் தற்சமயம் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க இத்திட்டம் குறித்த வதந்திகளும்  தொடர்ந்து பரவி வருகின்றது.

சமீபத்தில் கூட எந்த அட்டை உடையவர்களுக்கு இத்திட்டம் செல்லுபடியாகும் எனும் குழப்பம் எழுந்தது. இதற்கு ‘அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இச்சட்டம் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது  குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது  சாத்தியமில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இத்தகவலானது செய்திப்புனல் எனும் ஆன்லைன் ஊடகத்தில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே பரப்பப்படுகின்றது.

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததாக பரவும் பதிவு - 1

Archive

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததாக பரவும் பதிவு - 2

Archive

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததாக பரவும் பதிவு - 3

Archive

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைகளுடன் நிற்பது இந்திய வீராங்கனைகள் அணியா?

Fact Check/Verification

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவலின் பின்னணியில் இருந்த உண்மைத் தன்மைக் குறித்து தேடினோம்.

முன்னதாக தமிழக அரசு தரப்பிலிருந்து இதுபோன்று ஒரு அறிவிப்பு ஏதும் வந்துள்ளதா என்பதை தேடினோம். நம் தேடலில் இவ்வாறு ஒரு வந்ததற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.

அடுத்ததாக பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களோ, அல்லது தலைவர்களோ இதுபோன்று ஒரு தகவலைத் தந்தனரா என்பதை தேடினோம். அதிலும் இவ்வாறு ஒரு அறிவிப்பு வந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதேபோல் செய்திப்புனல் தவிர்த்து வேறு எந்த ஒரு ஊடகத்திலும் இவ்வாறு ஒரு அறிவிப்பு வந்ததாக செய்தி ஏதும் வந்திருக்கவில்லை.

ஆகவே எதன் அடிப்படையில் இவ்வாறு ஒரு செய்தி செய்திப்புனலில் பிரசுரிக்கப்பட்டது என்பதை அறிய, செய்திப்புனல் அதிகாரியைத் தொடர்புக் கொண்டோம்.

அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு இவ்வாறு ஒரு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக ஏதும் கிடைக்கவில்லை என்றும், தாங்கள் அந்த செய்தியை திருத்தி விடுவதாகவும் நமக்கு கூறினர்.

வாசகர்களின் புரிதலுக்காக செய்திப் புனலின் முந்தைய செய்தியையும், திருத்தப்பட்ட செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஒப்பீடு

இதனடிப்படையில் பார்க்கும்போது குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது தெளிவாகின்றது.

Also Read: கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?

Conclusion

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Seithi Punal:


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular