Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இந்தியாவில் நெருங்கி வருகிறது ஐந்து மாநில தேர்தல் களம். உத்திரபிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேரங்கள், கட்சித்தாவல்கள் என்று பாஜக மற்றும் போட்டிக்கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “நரேந்திர மோடி மனைவி யசோதாபென் காங்கிரசில் இணைந்தார்” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் என்று அறிவித்தாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?
Fact check/Verification
பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என்பதாகப் பரவுகின்ற வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சமீபத்தில் ஜசோதாபென் கட்சிகளில் இணைந்ததாக செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்தபோது அதுபோன்று எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை என்பது நமக்கு உறுதியானது.
தொடர்ந்து, குறிப்பிட்ட வீடியோவிலிருந்து காட்சிகளைப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த ஜனவரி, 2017 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி மனைவி ஜசோதாபென், பிரதமரின் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் பள்ளி ஒன்றில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ அது என்பது நமக்குத் தெரிய வந்தது. அதனையும் இங்கே இணைத்துள்ளோம்.
Conclusion
பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.