Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்கள் விழாவான மகர சங்கராந்தியை கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக IBC தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து அதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசினாரா பாஜக பேச்சாளர் நாராயணன் திருப்பதி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை IBC தமிழ் வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
“எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது!” என்று அண்ணாமலை பேசியதாக IBC தமிழ் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து அண்ணாமலை செயலர் பிரவீன் பிரபாகரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம். அவர், இத்தகவல் பொய்யானது, இவ்வாறு அண்ணாமலை எவ்விடத்திலும் பேசவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
Also Read: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு அரசு?
Conclusion
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Praveen Prabhakar, Personal Assistant of Annamalai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.