Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழக முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார்” என்று நாராயணன் திருப்பதி முதல்வர் குறித்து இழிவாக பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து இணையவாசிகள் இத்தகவலை அடிப்படையாக வைத்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: அரசு புத்தகப் பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் நீக்கமா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
“ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார்” என்றுநாராயணன் திருப்பதி தமிழக முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்த, இத்தகவலுக்கு ஆதாரமாக விளங்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
அதில் இப்படமானது சங்கமம் எனும் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்த வீடியோவின் முகப்பு படமாக (Thumbnail Image) வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து நாராயணன் திருப்பதி மேற்காணும் கூற்றை எந்த தருணத்தில் கூறினார் என்பது குறித்து அறிய அவ்வீடியோவை முழுமையாக ஆய்வு செய்தோம். இதில் நாராயணன் திருப்பதி மேற்காணும் கூற்றை கூறியதாக எந்த தகவலும் தரப்பட்டிருக்கவில்லை.
மாறாக மோடி தமிழக வருகை குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆ.எஸ்.பாரதியின் பேச்சுக்கு, நாராயணன் திருப்பதி அளித்திருந்த பதிலே அவ்வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
நாராயணன் திருப்பதி அவர்களும் இந்த பதில் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகியது என்னவென்றால் “ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார்” என்று நாராயணன் திருப்பதி எவ்விடத்திலும் பேசவே இல்லை. பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதற்காக இதுபோன்ற பொய்யான தலைப்பை வைத்துள்ளனர்.
நாராயணன் திருப்பதி அவர்களும் தனது டிவிட்டர் பக்கத்தில், வைராலாகும் தகவல் பொய்யானது என்றும், இவ்வாறு தகவலை பரப்பும் நிறுவனத்தின் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Also Read: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு அரசு?
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழக முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Narayanan Thirupathy Twitter Handle
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Ramkumar Kaliamurthy
June 4, 2025