Fact Check
போத்தீஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு 50,000 வரையில் பரிசுத்தொகை வழங்குவதாகப் பரவும் தகவல் உண்மையா?
Claim
போத்தீஸ் நிறுவனம் கிறிஸ்துமஸை முன்னிட்டு 50,000 வரையில் பரிசுத்தொகை வழங்குகிறது
Fact
வைரலாகும் தகவல் போலியாக பரவி வருகிறது.
போத்தீஸ் நிறுவனம் கிறிஸ்துமஸை முன்னிட்டு 50,000 வரையில் பரிசுத்தொகை வழங்குவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
”Pothys (போதீஸ்) உடன் கிறிஸ்துமஸைக் கொண்டாடி, உங்கள் சிறப்பு பரிசை பெறுங்கள்!” என்று இந்த தகவலுடன் கூடிய இணைப்பு பரவுகிறது.

சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
போத்தீஸ் நிறுவனம் கிறிஸ்துமஸை முன்னிட்டு 50,000 வரையில் பரிசுத்தொகை வழங்குவதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
அவர்களுடைய கேரள கிளையின் சமூக வலைத்தளப்பக்கங்களில் கிறிஸ்துமஸை முன்னிட்டு மளிகை பொருட்களுக்கு மட்டுமே தள்ளுபடிகள் அளித்திருப்பதைக் காண முடிந்தது.
எனவே, போத்தீஸ் தரப்பில் ஆராய்ந்தபோது வைரலாகப் பரவி வருகின்ற இணைப்பு குறித்து அவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “மதிப்பிற்குரிய வாடிக்கையாளரே, போத்தீஸ் வழங்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் குறித்து தவறான தகவல்கள் தற்போது இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் செய்திக்கும் போத்தீஸுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை.
வாடிக்கையாளர்கள் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். மேலும், எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அதிகாரப்பூர்வ சலுகைகள், பரிசுகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு, எப்போதும் www.pothys.com மற்றும் போத்தீஸின் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகத் தளங்களை மட்டுமே பார்க்கவும்..” என்று விளக்கமளித்துள்ளனர்.
Also Read: நிஜ புலியையும், மானையும் வைத்து சினிமா ஷூட்டிங் என்று செல்லூர் ராஜூ பகிர்ந்த வீடியோ உண்மையா?
Conclusion
போத்தீஸ் நிறுவனம் கிறிஸ்துமஸை முன்னிட்டு 50,000 வரையில் பரிசுத்தொகை வழங்குவதாகப் பரவும் தகவல் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, Pothys Official, Dated December 16, 2025
Instagram Post From, Pothys Super Stores Trivandrum, Dated December 03, 2025
Self Analysis