Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: மணிமேகலையும் பிரியங்காவும் சண்டையிட்ட ஆடியோ.
Fact: வைரலாகும் ஆடியோ ஒரு எடிட் ஆடியோவாகும். மணிமேகலையும் பிரியங்காவும் பங்குப்பெற்ற வேறு சில நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆடியோக்களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவரான மணிமேகலை விலகியுள்ளார். அவர் இந்நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கு விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேதான் காரணமென்று மறைமுகமாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மணிமேகலையும் பிரியங்காவும் குக் வித் கோமாளி படப்பிடிப்புத் தளத்தில் சண்டையிட்ட ஆடியோ என்று கூறி ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
மணிமேகலையும் பிரியங்காவும் சண்டையிட்டதாக பரவும் வீடியோவை கூர்மையாக கவனித்து கேட்கையில் பிரியங்காவும் மணிமேகலையும் பேசும் வார்த்தைகள் சில இடங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதை காண முடிந்தது.
ஆகவே முதலில் மணிமேகலை பேசிய வார்த்தைகளை தனியாக எடுத்து ஆய்வு செய்தோம். அதில் மணிமேகலை பங்குப்பெற்ற இரண்டு பிராங்க் (PRANK) வீடியோக்களின் ஆடியோக்களை எடுத்து இந்த வைரல ஆடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது. இந்த இரண்டு வீடியோக்களும் பிஹைண்ட்வுட் ஹிட்ஸ் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து பிரியங்கா ஆடியோ குறித்து ஆய்வு செய்தோம். அதில் முதல் ஆடியோவில் ‘இந்த மூஞ்சிதான்’ என கூறுவது மாகாபா ஆனந்தையாகும். இதுக்குறித்த வீடியோ விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 22, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது (இவ்வீடியோவின் 24 ஆவது விநாடியில் அது காணப்பட்டது).
இதை தொடர்ந்து ‘ஏ மணிமேகலை!’ என்று பிரியங்கா கூறுவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் என உறுதி செய்ய முடிந்தது. நிகழ்ச்சியில் இருவரும் மகிழ்ச்சியாக பேசும்போது பிரியங்கா இப்படி பேசுவதை காண முடிந்தது. இதுக்குறித்த வீடியோவானது விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 19, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது (இவ்வீடியோவின் 41 ஆவது விநாடியில் அது காணப்பட்டது).
இதை தொடர்ந்து பிரியங்கா சண்டையிடும் வார்த்தைகள் பிக்பாஸ் ஐந்தாம் சீசனில் பிரியங்கா போட்டியாளராக கலந்துக்கொண்டபோது சக போட்டியாளரான தாமரையை பார்த்து பேசியது என அறிய முடிந்தது. இதுக்குறித்த வீடியோக்கள் ஹாட்ஸ்டார் பக்கத்தில் (டிசம்பர் 28, 2021) இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது
Also Read: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
மணிமேகலையும் பிரியங்காவும் குக் வித் கோமாளி படப்பிடிப்புத் தளத்தில் சண்டையிட்டதாக பரவும் ஆடியோ எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். மணிமேகலையும் பிரியங்காவும் பங்குப்பெற்ற வேறு சில நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆடியோக்களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
YouTube video from Behindwoods hits, Dated September 10, 2024
YouTube video from Behindwoods hits, Dated September 01, 2024
YouTube video from Vijay Television, Dated August 22, 2022
YouTube video from Vijay Television, Dated August 19, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.