ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகப் பரவும் வதந்தி!

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகப் பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
திருமணத்திற்கு பிறகு மதம் மாறிய விஜே மணிமேகலை.

Fact
வைரலாகும் புகைப்படச்செய்தி தவறானதாகும். கடந்த 2020ஆம் ஆண்டே இப்புகைப்படம் பரவிய நிலையில், இருவரின் மத உணவுர்களையும் ஒருவொருக்கொருவர் மதிப்பதாகவும், மதம் மாறவில்லை எனவும் விளக்கமளித்திருந்தார் மணிமேகலை.

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகவும், லவ் ஜிகாத் என்பதாகவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”எப்படி ஆரம்பிச்சது,எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா..லவ்_ஜிகாத்..மதமென பிரிந்தது போதும்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை
Screenshot from Twitter @BS_Prasad
Screenshot from Twitter @karthinpm
Screenshot From Twitter @ASenthi12447593

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!

Fact Check / Verification

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகவும், லவ் ஜிகாத் எனவும் பரவும் புகைப்படத் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சின்னத்திரை தொகுப்பாளரான மணிமேகலை, உசேன் என்பவரை 2017ஆம் ஆண்டு பதிவுத்திருமணம் செய்து கொண்டார். அப்போதே, ”உசேனும் நானும் எங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை மதிக்கிறோம். நான் மதம் மாறவோ, பெயரை மாற்றிக்கொள்ளவோ போவதில்லை. உசேனின் குடும்பத்தில் யாருமே என்னை மதம் மாற கூறவில்லை” என்று தன்னை நோக்கி எழுப்பப்பட்ட மதம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் மணிமேகலை.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது, கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, “ஈத் முபாரக் மக்களே! முன்னாடி எல்லாம் நான் என் பிரண்ட்ஸ் கிட்ட பிரியாணி கேட்பேன் ரம்ஜானுக்கு. இப்போ எல்லாரும் என்கிட்ட பிரியாணி கேட்கிறாங்க. ஒரே நகைச்சுவையா இருக்கு போ” என்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அப்புகைப்படத்தின் கீழ், பதிவர் ஒருவர், “எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றி விட்டான்; இதற்கு பெயர் தான் லவ் ஜிகாத்” என்று அவதூறாகப் பதிவிட்டிருந்தார்.

அதற்கு மணிமேகலை, “ஹேப்பி ரம்ஜான் சொல்றதுக்கு எல்லாம் மதம் மாறிட்டுதான் சொல்லனுமா? இங்க யாரும் மதம் மாறவில்லை. உசேன் என்னுடன் கோவிலுக்கு வருவார். நான் அவருடன் ரம்ஜான் கொண்டாடுகிறேன். நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். உங்களுடைய குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள்” என்று பதிலளித்திருந்தார். இதுகுறித்த செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் வெளியாகியிருந்தது. மற்றொரு பதிவருக்கு, “இரண்டு வருடமாக பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்தில் இரண்டு பேரும் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்தோம். என்னுடைய ரம்ஜான் புகைப்படத்தைப் பார்ப்பது போலவே, எங்களுடைய தீபாவளி, பொங்கல் புகைப்படங்களையும் பார்த்தால் சந்தோஷப்படுவேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படமே தற்போது மீண்டும், ‘லவ் ஜிகாத்’, மதம் மாறிய மணிமேகலை என்பதாக பரவி வருகிறது. இருவரது மதம் சார்ந்த பண்டிகைகளையும் கொண்டாடும் மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசேன் இணைந்து அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் எப்போதும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வைரலாகிய பதிவைப் பகிர்ந்து நாம் கேட்டதைத் தொடர்ந்து சரவணபிரசாத்தின் ட்விட்டர் பதிவுக்கு “இப்டி லைஃப் புல்லா உளறிட்டு இருக்கறதுக்கு போய் உருப்படற வழியைப் பாக்காலாம்ல” என்று பதிலளித்துள்ளார் மணிமேகலை.

இதுகுறித்து, மணிமேகலையிடம் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு அவர், “இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு பதிலளிப்பது கூட தேவையற்ற வேலைதான். இதைவிட மிக முக்கியமான வேலைகள் எனக்கு வாழ்க்கையில் இருக்கிறது. போலியாக பரப்பப்படும் செய்திகளுக்கு எங்களிடம் நேரமில்லை” என்று விளக்கமளித்தார்.

Also Read: Fact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?

Conclusion

சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகவும், லவ் ஜிகாத் எனவும் பரவும் புகைப்படத் தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, VJ Manimegalai, Dated May 25, 2020
Twitter Reply From, VJ Manimegalai, Dated May 25, 2020
News Report From, Indian Express Tamil, Dated May 27, 2020
News Report From, Times Of India, Dated December 10, 2017
Twitter Post From, Manimegalai, Dated March 22, 2023
Phone Conversation With, Manimegalai, Dated March 22, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular