ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா...

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா நியூஸ் 7 தமிழ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தியதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தி

பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் என நாம் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் எனும் ஒற்றை உணர்வால் ஒன்றுப்பட்டு இருப்பதே இந்தியராகிய நமக்கு சிறப்பு. பல ஆண்டுகளாக ஒரு தாய் மக்களாக  வாழும் நம்மிடையே  மதம், சாதி எனும் வேற்றுமை விஷத்தை தங்களுடைய சுயநலத்திற்காக சிலர் கலக்க முயற்சித்து வருகின்றனர்.

அதுவும் சமூக வலைத்தளங்களில் இத்தகைய நபர்கள் அதிகம் காணப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரையோ அல்லது சாதியினரையோ தாழ்த்தி பதிவுகள் போடும் வழக்கம் சமீபத்தில் அதிகம் காணப்படுகின்றது. அதேபோல் பொதுவாக நடந்த ஒரு சம்பவத்தை தங்களுக்கு சாதகமாகவும், பிறருக்கு பாதகமாகவும் திரித்து பரப்பும் செயல்களும் அதிகரித்து வருகின்றது.

நடந்து வரும் ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இந்து என்பதாலும், கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதாலும்தான் இச்சாதனையை புரிந்தார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

கூடவே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்றையும் பரப்பி வருகின்றனர். அந்த நியூஸ்கார்டில் பி.வி.சிந்து தலையில் கலசம் வைத்திருக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தி - 1

Facebook Link | Archive Link

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தி - 2

Facebook Link | Archive Link

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தி - 3

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தியதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

நம் தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து நியூஸ் 7 தமிழ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் பி.வி.சிந்து டென்னிஸ் உடையில் இருக்கும்  படமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Archive Link

மேற்கண்ட நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

மதப்பற்று, மொழிப்பற்று என்பது அவரவர் தனிப்பட்ட உணர்வு,  அதை விமர்சிக்கவோ, அதுக்குறித்து கருத்து சொல்லவோ யாருக்கும் உரிமையில்லை. ஆனால் பொதுவாக நமது நாட்டிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரத்தை ஒரு குறிப்பிட்ட சாரார் சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையதற்கல்ல.  

Also Read: தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Conclusion

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தியதாக கூறி வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered

Our Sources

News 7 Tamil Twitter Handle: https://twitter.com/news7tamil/status/1421810203322818560


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular