Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பரமக்குடி ஜமீன் பெரியசாமித்தேவர் அவர்கள் பேத்தி வீர மங்கை பி.வி.சிந்து என்ற சிவகாமி நாச்சியார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்கிற புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில், வெண்கலம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அதுவும் குறிப்பிட்ட சமூகம் ஒன்றில் வழிவந்தவர் என்பதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“பரமக்குடி ஜமீன், பெரியசாமித்தேவர் அவர்கள் பேத்தியும் பெரு நிலக்கிழார் திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை அன்புத்தங்கை #P_V_சிந்து என்ற சிவகாமி நாச்சியார் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்று பரவுகின்ற அப்புகைப்படத்தை கேலியாக சிலரும், அது உண்மையான தகவல் என்று நம்பி சிலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பரமக்குடி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து என்று பரவும் தகவல் தவறானது என்பதை எடுத்துரைக்க அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பி.வி.சிந்து பிறந்த இடம் ஹைதராபாத். அவரது தந்தை பி.வி.ரமணா மற்றும் தாயார் பி.விஜயா.
பி.வி.சிந்து கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு பல வெற்றிகளைக் குவித்த நிலையில் அவருடைய குடும்பத்தினரின் பேட்டிகள் பல்வேறு செய்தி சேனல்கள், ஊடகங்களில் வெளி வந்துள்ளன.
சிந்துவின் தந்தை ரமணா, பி.வி.சிந்துவின் பேட்மிண்டன் பயிற்சிக்காக எவ்வளவு கடினமாக உழைத்துள்ளார்; அவருடைய வெற்றிக்குப் பின்புலமாக அவரது தந்தை ரமணா மற்றும் தாயார் விஜயா எவ்வாறு இருந்துள்ளனர் என்பதெல்லாம் அவர்களது பேட்டியுடன் வெளிவந்த கட்டுரையை இங்கே இணைத்துள்ளோம்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், அவரது பெற்றோர் ரமணா மற்றும் விஜயா, குடும்பத்தினர் ஆகியோரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி சாக்ஷி டிவியில் வெளியாகியுள்ளது. அதனையும் இங்கே இணைத்துள்ளோம்.
பரமக்குடி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து என்று பரவும் தகவல் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
SheThePeople: https://www.shethepeople.tv/home-top-video/successful-sportsperson-parents-worked-hard/
Sakshi Tv: https://youtu.be/FytW8Sb55dw
TV5 News: https://www.youtube.com/watch?v=FC_upxz9_w0
YouTube: https://www.youtube.com/watch?v=Eu4VKT1iZkE
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)