Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்
Fact: வைரலாகும் வீடியோ அசாமில் எடுக்கப்பட்டதாகும். மணிப்பூரில் எடுக்கப்பட்டது அல்ல.
மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை ஓட ஓட விரட்டிய மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மணிப்பூர் சென்ற இத்தாலி பப்புவை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?
மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 22, 2024 அன்று NDTV வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், “Crowd Raises Slogans Against Rahul Gandhi Outside Eatery In Assam” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வைரல் வீடியோவில் ANI லோகோ இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது கடந்த ஜனவரி 21, 2024 அன்று ”Assam: A large number of people carrying posters of ‘Rahul Gandhi go back’ and ‘Anyaya Yatra’ held a protest against Congress leader Rahul Gandhi in the Ambagan area of Nagaon this evening.” என்று இந்த வீடியோ குறித்த செய்தி வெளியாகியிருந்தது.
அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது அம்பாகன் பகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பினர் என்று இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட வீடியோ அசாமில் எடுக்கப்பட்டது;மணிப்பூர் அல்ல என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றார்களா?
மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from NDTV, Dated January 22, 2024
X post from ANI, Dated January 21, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Sabloo Thomas
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025