காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காம் தூண். இது எந்த ஒரு சார்பும் இன்றி நடுநிலையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நிதர்சனத்தில் எவ்வித சார்பும் இன்றி இயங்கும் ஊடகங்கள் மிகச் சொற்பமாகவே உள்ளன.
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சிகளை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சார்ந்தோதான் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஊடகங்கள் சமூகத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளையும் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து செய்தியாக வெளியிட்டு வருகின்றன. அதிலும் ஆன்லைன் ஊடகங்களில் இந்த போக்கு மிக அதிகமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் கதிர் நியூஸ் எனும் ஆன்லைன் ஊடகம் “குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்றபோது கையும் களவுமாக பிடிப்பட்ட ராகுல் காந்தி!” என்ற செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை கண்ட அனைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறி இத்தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம்; வைரலாகும் படம் உண்மையானதா?
Fact Check/Verification
ராகுல் காந்தி அவர்கள் குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இத்தகவல் குறித்து தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து நம்மால் தெளிவாக உணர முடிந்தது. குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டியதால் ராகுல் காந்தி எனும் நபர் கைது செய்யப்பட்டது உண்மையே. ஆனால் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்ல.
குஜராத்தின் சூரத் பகுதியில் ராகுல் காந்தி எனும் பெயருள்ள ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று சாலையில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவரை அப்பகுதி போலீஸார் கைது செய்து, அவர் ஓட்டி சென்ற 30 லட்சம் மதிப்புள்ள ஆடி காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த இந்த செய்தியே தவறான பொருள் தரும்படி திரித்து பரப்பட்டு வருகின்றது.

Conclusion
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டதாக பரவும் செய்தி தவறான ஒன்றாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)