சனிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2024
சனிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2024

HomeFact Checkரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி

Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது ராகுல் காந்தியை சந்திக்க விரும்பிய குழந்தைகள்

ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தனக்கு இன்னும் திருமணம் ஆகலையென உலகை நம்பவைத்த. இந்தியாவின் எதிர்கட்சி தலைவர். பிரிட்டிஷ் மற்றும் இத்தாலியின் நிரந்தர குடியுரிமை பெற்றவர். மனைவி மற்றும் குழந்தைகளுடன்.” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

Screenshot from X @GOVINDDPTNINDIA

X Link/Archived Link

Screenshot from X @Kumaras37961810

X Link/Archived Link

Screenshot from X @1961Ekmahes

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: 7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

Fact Check/Verification

ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது FirstKhaber வெளியிட்டிருந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், ராஜஸ்தான் பாரன் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் பிரியங்கா நந்த்வானாவின் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் இடம்பெற்றிருந்த செய்தியின்படி,கடந்த 2022ஆம் ஆண்டு ராகுல் காந்தி அவரை சந்திக்க விரும்பிய சில மாணவர்களை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஹெலிகாப்டரிலும் கூட்டிச்சென்றார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த, சிறுமியின் பேட்டியை Kanak News வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் பற்றிய மேலும் தகவல்களை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.  குறிப்பிட்ட புகைப்படமே மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவுகிறது.

 Also Read: கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

Conclusion

ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படத்தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube video from FirstKhaber, Dated December 09, 2022
Report from, TOI, Dated December 10, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular