அன்வர் ராஜா திமுகவிற்கு போனால் போகட்டும்; இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிற்கு தேவையில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.
”அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் போடப்பட்ட தரமற்ற சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
அன்வர் ராஜா திமுகவிற்கு போனால் போகட்டும்; இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிற்கு தேவையில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம். அப்போது, வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்று அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.
மேலும், இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த செய்தி போலியானது; நாங்கள் இதனை வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.
Also Read: காமராஜர் இறந்தபோது அழுத அறிஞர் அண்ணா என்று உளறிய சீமான்…வெளியிட்டு திருத்திய ஊடகங்கள்!
Conclusion
அன்வர் ராஜா திமுகவிற்கு போனால் போகட்டும்; இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிற்கு தேவையில்லை என்று ராஜேந்திர பாலாஜி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With Ivani, Puthiyathalaimurai, Dated July 22, 2025
X post by Puthiyathalaimurai, Dated July 21, 2025
Instagram Post by, Puthiyathalaimurai, Dated July 21, 2025