Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார் என்று பிரபல செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதுபோன்ற புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகின்றது.
Fact Check/Verification:
நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டு கால ஆய்வுக்கு பின்னர், தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புதிய கட்சி தொடங்கும் வேலை; தினசரி ஆலோசனைக் கூட்டம், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை என அவரது செயல்பாடுகளால் சமூக வலைத்தளங்கள் களை கட்டியுள்ளன.
ஆரம்பிக்கப்படவிருக்கும் அவரது புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில், கட்சியே இன்னும் தொடங்கியிருக்காத நிலையில், ‘ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்கத் தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து புறப்பட்டார்’ என்பது போன்ற செய்தியை முன்னணி சேனல் ஒன்று ஒளிப்பரப்பு செய்தது போன்ற புகைப்படம் ஒன்று வாட்ஸ்ப்பில் வைரலாகி வருகின்றது.
சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்ற இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதனை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
வைரலாகும் குறிப்பிட்ட புகைப்படம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டது போன்று இருந்தாலும், அதன் மேற்பகுதியில் காணப்படும் ‘மாற்றத்திற்கான பேரலை வெல்லும்; அதை விரைவில் நேரலை சொல்லும்’ என்கிற வார்த்தைகளை வைத்து சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்து பார்த்தோம்.
அப்பொழுதுதான், குறிப்பிட்ட அந்த புகைப்படத்தின் முழுமையான வடிவம் நமக்குக் கிடைத்தது. அது தொடர்பான வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன.
உண்மையில்,பரவும் அப்புகைப்படம் ஒரு போஸ்டர் ஆகும். ரஜினியின் அரசியல் வருகையை முன்னிட்டு, அவரது மதுரை ரசிகர்கள் தந்தி டிவியின் செய்தி வடிவில் புதுமையாக பிரிண்ட் செய்து ஒட்டிய போஸ்டர் என்பது நமக்குத் தெரிய வந்தது.
Conclusion:
எனவே, ரஜினிகாந்த் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவியேற்கப் புறப்பட்டார் என்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்; உண்மையில் அது ஒரு போஸ்டர் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து வாசகர்களுக்கு விளக்கமளித்துள்ளோம். இதுபோன்ற வதந்திகளை வாசகர்கள் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
Result: Misleading
Our sources:
FB: https://www.facebook.com/100038064402107/videos/380363009909176/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.